எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

 






எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் 



அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.  

வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள். 

நன்றி!

அன்பரசு

24.12.2021

----------------------------



எழுத்தாளர் இசபெல் அலண்டே


அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

நலமா? 

கணையாழி இதழின் டிசம்பர் வெளியீட்டை பிடிஎஃப்பை படித்துக்கொண்டிருக்கிறேன். முஜீப் ரஹ்மான் எழுதிய எழுதுவது நம்பிக்கையின் செயல் - இசபெல் அலண்டே கட்டுரையைப் படித்து வருகிறேன். இதில், இசபெல் தான் எழுதிய நாவல், எதற்கு எழுதுகிறேன் என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். 

பணம் - எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாவலை இரண்டு மணிநேரத்தில் படித்துவிட்டேன். தமிழில் கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். காந்தி என்ற இளைஞன், தொழிலதிபர் ராஜாராமிடம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் சம்பாதித்துக் காட்டுவதாக சவால் விடுகிறான். இதில் அவன் ஜெயித்தானா என்பதுதான் கதை. 

கதையின் சம்பவங்கள், பாத்திரங்கள் வலுவான தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கே.என்.சிவராமன் சார் வாங்கிக்கொடுத்த நூல் இது. 

அன்பரசு

9.12.2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்