காணாமல் போன ஆற்றை மீட்கும் நாடு! - வெப்பமயமாதல் பரிதாபம்

 









காணாமல் போன ஆற்றை மீட்கும் பாரிஸ் நகரம்!

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்பத்தைக் குறைக்கும் பல்வேறு யோசனைகளை முக்கிய நகர நிர்வாக அதிகாரிகள் செயல்படுத்த  முன்வந்துள்ளனர். அதில் ஒன்றுதான், காணாமல் போன ஆறுகளை மீட்பது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் பீவ்ரே (Bievre) என்ற ஆற்றை மீட்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

1899ஆம் ஆண்டு, பிரெஞ்சு பத்திரிகையான லே ஃபிகாரோவில் பீவ்ரே என்ற ஆறு பற்றி செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, பாரிஸின் தெற்குப் பகுதியிலிருந்து, நகரின் மையமான சீயின் (Seine) வரை (35 கி.மீ.) பீவ்ரே ஆற்றின் வழித்தடம் இருந்தது. இதன் அகலம் 13 அடி ஆகும். தொழிற்சாலைகள் அதிகரித்தபிறகு, ஆறு மாசுபடத் தொடங்கியது. ஆற்று நீர் அமிலங்கள், நிறமிகள், எண்ணெய் கலந்து கருப்பு நிறத்தில் ஓடியது என பத்திரிகையில் செய்தியே வெளியானது. மாசுபட்ட பீவ்ரே ஆற்றை முழுமையாக மூடிவிட, மக்கள் இசைந்தனர். எனவே,  அதிகாரிகளும் அதை ஏற்க, 1912ஆம் ஆண்டு ஆற்றின் வழித்தடத்தை முழுமையாக மூடினர். 

 தற்போது பாரிஸ் நகரின் தோராய வெப்பநிலை, 2.3 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இது பிற பகுதியில் நிலவும் வெப்பத்தை விட அதிகம். தொழிற்சாலைகள் பெருகுவதற்கு முன்பிருந்ததை விட தற்போதைய வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என வானிலை வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.  ”இந்நகரத்தை எதிர்காலத்திற்கேற்ப மாற்றுவதற்கு நமக்கு கிடைத்துள்ள கருவிதான்  பீவ்ரே ஆறு. நமக்கு கிடைத்துள்ள விஷயங்களை வைத்து வரம்பிற்குள் செய்ய வேண்டியதை செய்வோம் ”என்றார் பாரிஸ் துணை நகரத் தலைவரான டான் லெர்ட். 

பீவ்ரே ஆறு மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு, மீட்கப்பட்டால் நகரின் வெப்பநிலை குறையலாம். நீரின் மூலக்கூறுகள் காற்று மற்றும் சூழலில் உள்ள வெப்பத்தை உட்கிரகித்துக்கொள்ளும். கூடுதலாக, மழைபொழிவு ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டாலும், மிகுதியான நீர் ஆற்றில் சென்றுவிடும். இதன் விளைவாக, வெள்ளநீர் நகரில் தேங்குவது பெருமளவு குறையும். மக்களுக்கும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பும் குறைவாகவே இருக்கும்.  

ஆற்றை மீட்பதற்கான அதிகாரிகளின் பரிந்துரையை பாரிஸ் நகர மேயர் அன்னா ஹிடால்கோ ஏற்றுக்கொண்டுள்ளார்.   2026ஆம் ஆண்டுக்குள் பீவ்ரே ஆற்றின், புனரமைப்பு ஆய்வு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்செயல்பாடுகளுக்கான  நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது.  பீவ்ரே ஆற்றை பாரிஸ் நகருக்கு அடியில் குழாய் வழியாக சீயின் நகருக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யப்படவிருக்கிறது. 

இதைப்போலவே பிற நாடுகளிலும் ஆற்றை மீட்கும் செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மேட்லாக் ஆற்றை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டது. இந்த ஆறு மூடப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகர நிர்வாகம், திபெத்ஸ் ப்ரூக் ஆற்றை மீண்டும் புனரமைப்பு செய்ய திட்டமிட்டு வருகிறது. 

தகவல்

Time

why is paris uncovering a river it buried a century ago?

time 14.2.2022



கருத்துகள்