இடுகைகள்

பிளாட்டினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செம்பு, பிளாட்டினத்தின் தோற்றம்!

படம்
  தெரியுமா? செம்பு தொன்மைக் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய முதல் உலோகம், செம்பு என புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  கி.மு. 8000 இல், அன்றைய மனிதகுலம் கற்களுக்குப் பதிலாக செம்பை பயன்படுத்த தொடங்கினர் என மானிட ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கி.மு. 4000இல், எகிப்தியர்கள்  செம்பை உருக்கி அச்சுக்களில் பயன்படுத்த தொடங்கினர்.  பிற்காலங்களில் செம்புடன்,தகரத்தை சேர்த்து வெண்கலத்தை உருவாக்கப் பயன்படுத்தினர். பொதுவாக செம்பை எளிதாக உருக்கி, பல்வேறு வார்ப்புகளைச் செய்யலாம். இதன் காரணாக, மக்கள் வீட்டுக்குப் பயன்படும் குழாய்களைச் செய்ய செம்பையே நாடினர்.   பிளாட்டினம் 1500களில் ஸ்பெயின் நாட்டினர், பிளாட்டினத்தை முதல்முறையாக கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர்.  பிளாட்டினா டெல் பின்டோ (Platina del pinto)என்ற வார்த்தையிலிருந்துதான் பிளாட்டினா என்ற வார்த்தை உருவானது. இதற்கு சிறிய வெள்ளி என்று பொருள். மக்கள் தொடக்கத்தில் இதனை, தூய்மைப்படுத்தப்படாத வெள்ளி என்று முதலில் கருதினர்.  சுரங்கத்தில் இரும்பு மற்றும் மெக்னீசியம் மிகுந்துள்ள பாறைகளில் இருந்து பிளாட்டினம் அதிகளவு பெறப்படுகிறது. பொதுவாக பிளாட்டினத்து

வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

படம்
              வணிக ரீதியான மின் விளக்குகள் சர் ஹம்பிரி டேவி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி , பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார் . அவரது சோதனை பயன் கொடுத்தது . பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை . ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது . வாரன் டி லா ரூ 1840 ஆம் ஆண்டு வேதியியலாளரும் , வானியலாளருமான ரூ , பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார் . இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான் . ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல் . எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை . ஜீன் ராபர்ட் ஹூடின் 1852 ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார் . ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை , விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை . எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை . ஜோசப் ஸ்வான் பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்ட