கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்
விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார். நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...