வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!
கம்மாத்து தெலுங்கு சுவாதி தீக்சித் ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை. ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர். அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திர...