போன்சாய் மரங்களின் இயல்பு, வாசனை உணர்த்துவது என்ன? - வினோத ரச மஞ்சரி











போன்சாய் மரங்கள், சிறு தொட்டியில் வளர்க்கும்படியானவை. இவற்றை சாதாரணமாக வளர்த்தால் பெரிய மரமாகும் வாய்ப்புண்டு. ஆனால் அதன் வளர்ச்சியை சிறு தொட்டியில் கட்டுப்படுத்துகின்றனர். போன்சாயின் வேர்கள், தொட்டிக்குள் குறிப்பிட்ட அளவு வளர்கின்றன. அவற்றின் தண்டு, கிளை ஆகியவையும் பெரிய மரங்களைப் போன்ற தன்மையில் மினியேச்சர் வடிவில் உள்ளன. 

வாசனைகளை முகர்ந்ததும் அது இனிமையானதா, ஆபத்தானதா என்று நாம் யோசிப்பது நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களை வைத்துத்தான். சமையல் எரிவாயு கசியும்போது, நாம் முகரும் வாசனை மோசமானது அல்ல. ஆனால் அதை ஆபத்தானது என உடனே உணர்கிறோம்.  நாம் முகரும் வாசனை மிகவும் திடமாக இருந்தால், அதனை ஆபத்தோடு இணைத்து பார்த்து எச்சரிக்கையாவது மனித இயல்பு. 

எறும்புகளுக்கு நுரையீரல் இல்லை. எறும்புகள் மட்டுமல்ல பல்வேறு பூச்சிகளும் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இதன் பெயர், ஸ்பைராகில்ஸ் (spiracles). 

மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும்போது, நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முன்னதாக பார்வை மங்குவது, குமட்டல், வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மன அழுத்தம், வலி ஆகியவை மயக்கத்தை ஏற்படுத்தும். கடுமையான இருமல், உடற்பயிற்சி, சிறுநீர் கழிப்பது ஆகிய சூழல்களின்போது மயக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 


how it works 2022

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்