இடுகைகள்

போக்சோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்