இடுகைகள்

சக்கர நாற்காலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீல்சேரில் ஆர்ட் - கலக்கும் ஐரிஷ் சகோதரிகள்!

படம்
வீல்சேரில் ஆர்ட்! அய்ல்பே கீன், தன்னுடைய மாற்றுத்திறனாளி தங்கையின் வீல்சேரையே கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார். ஸ்பினை பைஃபிடா எனும் குறைபாட்டால் கீனின் சகோதரி பாதிக்கப்பட்டார். இதன்விளைவாக சக்கர நாற்காலியை நம்பியுள்ளார். இவரது சக்கர நாற்காலியை வண்ணமாக்கியுள்ளார் கீன். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். டப்ளினைச் சேர்ந்த இஸ்ஸி வீல்ஸ் எனும் அமைப்பை இச்சகோதரிகள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சக்கர நாற்காலியில் பயன்படுத்தும் வண்ணச் சக்கரங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனை விற்க இவர் விளம்பரம் ஏதும் செய்வதில்லை. இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டும் விளம்பரத்தின் பணியை செவ்வனே செய்கின்றன. 2016 ஆம் ஆண்டு இஸ்ஸி வீல்ஸ் என்ற திட்டத்தை கல்லூரி புராஜெக்டாக தொடங்கினார் கீன். இவர் ஓராண்டாக தன் சகோதரியின் சக்கர நாற்காலியை எப்படி மேம்படுத்துவது என யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். கீன் மற்றும் இசபெல் இருவரும் இந்த அமைப்பு மூலம் வரும் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதியை அயர்லாந்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புக்கு வழங்கி வருகின்றனர். 35 நாடுகள