இடுகைகள்

ஜாலி பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலியோடு போராட்டம்!

படம்
பிட்ஸ்! எலியோடு போர்! அமெரிக்காவின் நியூயார்க் ரயில்வே ஸ்டேஷனில் பெண் ஊழியர் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மெகா சைஸ் எலி அவரின் ஸ்நாக்ஸ் பாக்கெட்டை லபக்க முற்பட்டது. நொடியில் எரிமலையான ஊழியர் கையில் கிடைத்த துடைப்பத்தை எடுத்து எலியோடு போரிட சென்றுவிட்டார். இந்த கடமை கண்ணிய வீடியோவை பயணிகள் எடுத்து இணையத்தில் பதிவிட, ரயில்வே நிறுவனம் எலியோடு போராடி பணியை செய்யாத ஊழியரின் நடத்தைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ட்வின்ஸ் கிறிஸ்துமஸ்! அமெரிக்காவின் சிகாகோவில் இரட்டையர்களை பெற்ற தாய்களின் குழு, 23 ட்வின்ஸ் குழந்தைகள் சகிதமாக மால் ஒன்றில் எடுத்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. ஸ்காப்பர்க்கிலுள்ள வுட்ஃபீல்டிலுள்ள மாலில் கூடிய 23 ட்வின்ஸ் குழந்தை தாய்மார்கள்கள் சான்டாகிளாஸ் தாத்தாவோடு கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஸ்பெஷல் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். மாரத்தானில் ஆள்மாறாட்டம்! சீனாவின் ஷென்ஸென் பகுதியில் மாரத்தான் போட்டி அறிவிக்கப்பட்டு நடந்தது. அதில் பங்கேற்று முறைகேட்டில் ஈடுபட்ட 258 வீரர்கள் தகுதிநீக்கப்பட்டது அதிர்ச்சி தந்துள்ளது. போக்

காமெடி கல்யாணம்!- விநோத வெட்டிங் செய்திகள்!

படம்
கல்யாண கலகலப்பு! அண்மையில் பிரபல ஹாலிவுட் நடிகை வினோனா ரைடர், “1992 ஆம் ஆண்டு நானும் கீனு ரீவ்சும்   டிராகுலா படத்தில் தம்பதிகளாக இணைந்து நடித்தோம். அப்போதே அவரை திருமணம் செய்திருக்கலாம்” என பேட்டியளித்திருக்கிறார். அதுபோல ஜாலி கல்யாண தகராறுகள் இதோ!.. 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் லண்டனைச் சேர்ந்தவர் குறுஞ்செய்தியை வாட்ஸ்அப் வழியே தவறான எண்ணுக்கு அனுப்பிவிட்டார். தவறுக்கு சாரி கேட்டு பெண்ணிடம் பழகியவர், அப்பெண்ணுடன் டேட்டிங் சென்று மூன்று மாதத்திற்கு பிறகு கெட்டிமேளம் கொட்டியிருக்கிறார். இவ்வாண்டின் மே மாதம், பிரேசிலில் வின்ஹெடோவில் கல்யாண ரிசப்ஷன் நடைபெற்றது. பிரமாண்டத்திற்காக கல்யாண ஜோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்கியது. லேண்டாகும்போது ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பற்றியது. டேக் இட் ஈஸியாக அதிலிருந்து தப்பித்து ரிசப்ஷனில் பங்கேற்று போஸ் கொடுத்தது புதுமையான கல்யாண ஜோடி. கடந்த ஜூனில் நியூ மெக்சிகோவின் சான்டியா மலைத்தொடருக்கு ஜாலி சுற்றுலா வந்தார் இளைஞர். அங்கு காதல் பரவசத்திலிருந்த ஜோடி, போட்டோ எடுக்க இம்சை கொடுத்தது. இளைஞரும் கேமராவை கிளிக் செய்த எடுத்த போட்டோக்கள

தீராத விளையாட்டு தாத்தா!

படம்
பிட்ஸ் !   96 வயது மாணவி !   4 ஆம் வகுப்பு பாஸ் ஆவது பெரிய விஷயமா ? கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி தன் 96 வயதில் அதை சாதித்ததுதான் அசகாய சாதனை . கேரள அரசின் அக்‌ஷரலக்‌ஷம் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி வென்ற பாட்டியை மஹிந்திரா குழுமத்தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் இந்த வயதில் கல்வி மீது ஆர்வமா ? என பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளனர் . பீட்ஸா மியூசியம் ! அமெரிக்காவின் சிகாகோவில் பீட்ஸாவுக்கென அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது . டிசம்பர் வரை செயல்படும் இந்த மியூசியத்தில் பீட்ஸா வரலாறு , முக்கியமான மெனுக்கள் , கண்டுபிடிப்புகள் என அணிவகுத்துள்ளன . " அமெரிக்கர்களின் விருப்ப உணவான பீட்ஸா குறித்து ஆல் இன் ஆல் அறிவது பலருக்கும் ஆர்வமாக இருக்கும் " என்கிறார் மியூசியத்தலைவர் கென்டல் ப்ரூன்ஸ் . வெள்ளத்தில் சூப்பர்ஹீரோ ! கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நிகழ்வு . வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிலுள்ள செருத்தோனி பாலத்தில் அப்பாலம் முழுகும் சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தையோடு வாலிபர் தப்பித்த

தங்கநகையோடு யாத்திரை!

படம்
பிட்ஸ் ! எனக்கு நானே எஜமான் ! அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த கோல்டன் ரெட்ரீவர் இன நாய் , வாக்கிங் கயிற்றை தானே வாயில் கவ்வி நடந்த வீடியோதான் நெட்டில் ஹிட் வைரல் . எனக்கு நானே எஜமானன் என தன் ஓனருக்கு உணர்த்தி வாக்கிங் நடந்த 3 நிமிட வீடியோவை லட்சத்திற்கு மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர் . பிரில்லியண்ட் தோழன் ! அக்குள் விளம்பரம் ! ஜப்பானைச் சேர்ந்த வகினோ விளம்பரக்கம்பெனி லிபெர்ட்டா அழகு சாதனப்பொருட்களை விளம்பரம் செய்த இடத்தால் பிரபலமாகியுள்ளது . பில்போர்டு , நோட்டீஸ் , விளம்பரம் கொடுக்காமல் இளம் பெண்களின் நாசூக்கான அக்குள் பகுதியில் பியூட்டி விளம்பரங்களை ஒட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது . மாடல் பெண்களின் ஒரு மணிநேர கால்ஷீட் தோராயமாக ரூ .6,157 தான் . விளம்பரத்தை உத்துப்பார்த்தாலே சர்ச்சையாகுமே ! தங்க பாபாவின் சில்வர்ஜூப்ளி ! உத்தர்காண்ட் மற்றும் பீகாரிலுள்ள சிவனின் புனித தலங்களை தரிசிக்க செல்லும் தங்க பாபா சுதீர் மக்கார் , கன்வார் யாத்திரையை விட பிரபலமாகிவிட்டார் .   கழுத்தில் அணிந்துள்ள 20 கி . கி தங்க நகைகளும் அதற்கு செக்யூரிட்டியாக வரும் போலீசும

அறிவியல் பிட்ஸ்! - கியூபிக்கிள் டிசைன் கண்டுபிடிப்பாளர்!

பிட்ஸ் ! பாதாம் பருப்புகள் மற்றும் பீச் பழம் ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உணவுப்பொருட்கள் . மாத காலண்டரில் 13 ஆம் தேதியைப் பார்த்து ஏற்படும் பயத்திற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர் . அமெரிக்க அதிபராக இருந்த ஜெஃபர்சனுக்கு அலுவலக மிடுக்கு ஆடைகள் என்றால் ஆகாது . தனது வெளிநாட்டு விருந்தினர்களை சந்திக்கும்போது பைஜாமாக்கள் அணிவதே இவரின் வழக்கம் . சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அனிமேஷன் திரைப்படம் Beauty and the Beast. 1968 ஆம் ஆண்டு அலுவலகத்தின் க்யூபிகிள் வடிவ டிசைனை உருவாக்கியவர் ராபர்ட் ப்ராப்ஸ்ட் . ' பணியாளருக்கான சுதந்திரமான  டிசைன் ' என இவரின் வடிவமைப்பு புகழ்பெற்றது .