அறிவியல் பிட்ஸ்! - கியூபிக்கிள் டிசைன் கண்டுபிடிப்பாளர்!







பிட்ஸ்!

பாதாம் பருப்புகள் மற்றும் பீச் பழம் ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உணவுப்பொருட்கள்.

மாத காலண்டரில் 13 ஆம் தேதியைப் பார்த்து ஏற்படும் பயத்திற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர்.

அமெரிக்க அதிபராக இருந்த ஜெஃபர்சனுக்கு அலுவலக மிடுக்கு ஆடைகள் என்றால் ஆகாது. தனது வெளிநாட்டு விருந்தினர்களை சந்திக்கும்போது பைஜாமாக்கள் அணிவதே இவரின் வழக்கம்.

சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அனிமேஷன் திரைப்படம் Beauty and the Beast.

1968 ஆம் ஆண்டு அலுவலகத்தின் க்யூபிகிள் வடிவ டிசைனை உருவாக்கியவர் ராபர்ட் ப்ராப்ஸ்ட். 'பணியாளருக்கான சுதந்திரமான  டிசைன்' என இவரின் வடிவமைப்பு புகழ்பெற்றது.