புற்றுநோயை கண்டறிய புதிய சிகிச்சை!
புற்றைக் கண்டறியும்
காந்தம்!
ரத்தக்குழாய்களில்
காந்த வயர் மூலம் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கும் முறையை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோயைக் கண்டறிய பல்வேறு வழிகளை
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். ரத்தசோதனையும்
அதில் ஒன்று. சிறியவகை புற்றுக்கட்டிகள் ரத்தசோதனையில் கண்டறியமுடியாது.
எனவே இந்த ரத்தநாளத்தில் காந்த வயர்களை நுழைத்து சோதிப்பதில் அவை எளிதில்
கண்டறியப்படும்.
"சாதாரண
ரத்தசோதனையில் சிறியளவு புற்றுக்கட்டிகளை கண்டறிவது மிக கடினமான ஒன்று"
என்கிறார் மூத்த ஆராய்ச்சியாளரான சாம் கம்பீர். நாளங்களில் உட்செலுத்தப்படும் காந்த வயர், அதிலுள்ள நானோதுகள்கள்
மூலம் புற்றுசெல்களை ஈர்த்து அதில் ஒட்டவைக்கிறது. தற்போதைய புற்றுசெல்களை
அறியும் சோதனைகளை இது 80 சதவிகிதம் சிறப்பான பயன்களை அளிக்கிறது.
நானோதுகள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள்
விரைவில் மனிதர்களின் மீது இச்சோதனைகளை நிகழ்த்தவிருக்கிறார்கள். நோயுற்ற புற்றுநோய் டிஎன்ஏ, பாக்டீரியா தொற்று உள்ளிட்டவற்றை
ரத்தம் மூலம் கண்டறியும் இச்சோதனை எதிர்காலத்தில் உதவும் என்கிறது ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள்
குழு.