வட இந்தியர்களின் இடப்பெயர்ச்சி!





Image result for north indians workers




வட இந்தியாவின் ஆக்கிரமிப்பு!

சிவசேனா கூறுவது போல பிற மாநில மக்களால் வாய்ப்பு பறிபோகிறது என பின்னாளில் சீமான் மேடைகள் பற்றியெரியும்படி பேசலாம். அப்போது அவர் பாஜகவுடன் கூட கூட்டணியில் இருக்கலாம். ஏன் நடக்க கூடாது? ஆனால் வட இந்தியர்கள் ஏன் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்கிறார்கள்? காரணம் தென்னிந்தியர்கள் சட்டைக் காலர் அழுக்கு படாத வேலைகளுக்கு சென்றுவிட்டனர். இன்று தென்னிந்தியாவிலுள்ள ப்ளூகாலர் வேலைகளுக்கு போஜ்புரி, இந்தி பாடல்களை கேட்கும் மனிதர்களை தவிர வேறு வாய்ப்பே இல்லை. 


வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சமூகநலத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களின் பார்வை தென்மாநிலங்களை நோக்கி திரும்பியுள்ளது. பீகார், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மக்கள்தொகைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் பல்வேறு வேலைவாய்ப்புகளை வட இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

சாலைவசதி, கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வட இந்தியர்கள் வாழ்வதற்காக தென் மாநிலங்களை தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்களாக உள்ளன.

கேரள மாநில குடிமகன்கள் பெரும்பாலும் வளைகுடாக்களின் பணிபுரிந்து பணம் அனுப்பி தங்கள் கனவு வீட்டை கட்டுவது வழக்கம். இதன் காரணமாக கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கிராக்கி உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து வரும் வட இந்திய தொழிலாளர்களின் வாழ்வை கரை சேர்த்துள்ளது.  

பாக்ஸ் 1

             1991            2011

ஆந்திரா -   3,66,000      31,20,000
கர்நாடகா-  2,70,000     20,3,000
தமிழ்நாடு- 1,35,000      3,93,000
கேரளா-        19,956       51,928

(Census 2011 தகவல்படி)

வட இந்தியத்தொழிலாளர்களை காப்பீடு, முறையான சம்பளம் இன்றி சுரண்டி கொழுக்கும் முதலாளிகளும் ஏஜெண்டுகளும் தென்னிந்தியாவில் பெருகி வருகின்றனர். அரசியல்ரீதியாக தம் நிர்வாக திறனின்மைகளை ஒப்புக்கொள்ளாத அரசியல்வாதிகள், வட இந்தியர்களை குற்றச்சம்பவங்களில் தொடர்புபடுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு செய்ய படுகொலை சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. முறையான ஆவணங்களும், கண்காணிப்புகளும் இன்றி குற்றங்களை தடுக்க முடியாது என்பதே இந்தியாவின் யதார்த்த உண்மை.  


பிரபலமான இடுகைகள்