போலிச்செய்தி தளங்கள் தடை!



Image result for website ban


இணையதளங்களுக்கு தடை!

கடந்த பதினெட்டு மாதங்களில் 1,662 இணையதளங்களை, சமூகவலைதள பதிவுகளை அரசு தடை செய்துள்ளதாக தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில்(ஆக.3, 2018) தெரிவித்துள்ளார். ்போலிச்செய்திகளை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப சட்டப்படி(69A,2000) ஃபேஸ்புக் 56%, ட்விட்டர் 25%, யூட்யூப் 9% பதிவுகளை முடக்கியுள்ளன. இந்திய அரசின் ஒருமைப்பாட்டுணர்வை குலைக்கும் விதமாக செயல்படும் இணையதள பதிவுகளுக்கு ஏழாண்டு சிறைதண்டனையோடு கணிசமான அபராத தொகையும் உண்டு.

உலகில் 2,190 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 9%. டவிட்டரில் 8%. பிப்ரவரி 2017 வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக(13%) அதிகரித்துள்ளது. ஜூலை 2018 இல் ஃபேஸ்புக் 5 லட்சம் பயனர்களைக் கொண்ட போஸ்ட்கார்டு நியூஸ் பதிவுகளை காப்பிரைட், போலிச்செய்திகள் புகார்களினால் நீக்கியுள்ளதை பூம் இணையதளம் உறுதிசெய்துள்ளது. இதன் நிறுவனர் மகேஷ் ஹெக்டே அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். போலிச்செய்திகள் பரப்புவதற்கு சமூகவலைதளங்கள் 77% உதவியுள்ளன.