தங்கநகையோடு யாத்திரை!



Image result for golden retriever



பிட்ஸ்!


எனக்கு நானே எஜமான்!

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த கோல்டன் ரெட்ரீவர் இன நாய், வாக்கிங் கயிற்றை தானே வாயில் கவ்வி நடந்த வீடியோதான் நெட்டில் ஹிட் வைரல். எனக்கு நானே எஜமானன் என தன் ஓனருக்கு உணர்த்தி வாக்கிங் நடந்த 3 நிமிட வீடியோவை லட்சத்திற்கு மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர். பிரில்லியண்ட் தோழன்!

அக்குள் விளம்பரம்!

ஜப்பானைச் சேர்ந்த வகினோ விளம்பரக்கம்பெனி லிபெர்ட்டா அழகு சாதனப்பொருட்களை விளம்பரம் செய்த இடத்தால் பிரபலமாகியுள்ளது. பில்போர்டு, நோட்டீஸ், விளம்பரம் கொடுக்காமல் இளம் பெண்களின் நாசூக்கான அக்குள் பகுதியில் பியூட்டி விளம்பரங்களை ஒட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாடல் பெண்களின் ஒரு மணிநேர கால்ஷீட் தோராயமாக ரூ.6,157 தான். விளம்பரத்தை உத்துப்பார்த்தாலே சர்ச்சையாகுமே!

தங்க பாபாவின் சில்வர்ஜூப்ளி!

உத்தர்காண்ட் மற்றும் பீகாரிலுள்ள சிவனின் புனித தலங்களை தரிசிக்க செல்லும் தங்க பாபா சுதீர் மக்கார், கன்வார் யாத்திரையை விட பிரபலமாகிவிட்டார்.  கழுத்தில் அணிந்துள்ள 20 கி.கி தங்க நகைகளும் அதற்கு செக்யூரிட்டியாக வரும் போலீசும்தான் காரணம். 25 ஆண்டாக சில்வர்ஜூப்ளி யாத்திரை செல்லும் சுதீர், முன்பு பிஸினஸ் மேனாக இருந்தவராம். புனித யாத்திரை தங்க யாத்திரையாகிவிட்டதே!

பாகிஸ்தான் சூப்பர்சிங்கர்!

பாகிஸ்தானில் சுவருக்கு பெயிண்ட் அடிக்கும் முகமது ஆரிஃப் என்பவர் கேசுவலாக பாடிய ஹமாரி அதூரி கஹானி என்ற பதினொரு நிமிட பாடல் வீடியோ இணையத்தை கட்டிப்போட்டுள்ளது. பாடலை முகமதமு இயல்பான மெஸ்மரிச குரலில் பாடியதுதான் காரணம். ஃபேஸ்புக்கில் அக்பர் என்பவர் இவ்வீடியோவை பதிவு செய்திருந்தார். சூப்பர்வாய்ஸ் ஆடிஷனுக்கு வந்துருங்க ப்ரோ!