ரஷ்யாவை உலுக்கும் தலைவலி!
பென்ஷன் தலைவலி!
பென்ஷன் பெறும்
வயதை உயர்த்தக்கோரிய போராட்டம் ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியால் கவனம் பெறாமல்
இருந்தது.
போராட்டத்தில் குதிக்க முடிவெடுத்துள்ள போராட்டக்காரர்களை முடக்க அரசு
காவல்துறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இணைய தலைமுறையை இப்போராட்டம்
பெரிதாக ஈர்க்கவில்லை.
தற்போது பெண்களுக்கு
ஐம்பத்தைந்தாக உள்ள வயதை
63 ஆகவும், ஆண்களுக்கு அறுபத்தைந்தாக உள்ள வயதை
65 என மாற்று்வதற்கும்தான் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசு பென்ஷன் வயதை மாற்றிய சட்டத்திற்கு எதிராக தொழிலாளர் ஃபெடரேஷன் கொண்டுவந்த
கையெழுத்து பிரசாரத்தில் இதுவரை 27 லட்சம் பேர் கையெழுத்திட்டு
ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிலுள்ள எதிர்க்கட்சிகளும் இதற்கு
ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளன. எதிர்கட்சிகள் செயல்படுவதை
விட பேசிக்கொண்டேயிருப்பது மக்களின் நம்பிக்கையை குறைப்பதாயிருக்கிறது.