ஆர்எஸ்எஸ் ஆலோசனைகளை கேட்க மோடி விரும்புவதில்லை!
நேர்காணல்
"ஆர்எஸ்எஸ் விரும்பாவிட்டாலும் அதன் பிரபல முகம் மோடி மட்டுமே"
வால்டர் ஆண்டர்சன், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
RSS: A View to the Inside, என்ற நூலை தர் தம்லேயுடன் இணைந்து எழுதியுள்ள பேராசிரியர்
வால்டர் ஆண்டர்சன் டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி
வருகிறார்.
இந்துத்துவ அமைப்புகள் தீவிரமாக செயல்படுத்தி
வரும் சர்ச்சைக்குரிய கர்வாப்ஸி பற்றி உங்களுடைய கருத்தென்ன?
முன்னரே பரபரப்பான பிரச்னையாக இது பேசப்பட்டாலும்
சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அமைப்பில் இடம்பெறத்தொடங்கியதும் இது ஊடகங்களில்
முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. சங் பரிவாரங்கள், தங்களின் பெயர் வெளிப்படையாக தெரியாமல்
கர் வாப்ஸி விஷயங்களை முன்னர் செய்து வந்தனர். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது,
அங்கு நடந்த இவ்விஷயங்களை வளர்ச்சி என்ற பெயரில் எளிதாக மக்களின் பார்வையிலிருந்து
மறைத்தார். அதிகாரப்பூர்வமாக 36 அமைப்புகளும், அதிகாரப்பூர்வமற்று நூற்றுக்கும் மேலான
கிளை அமைப்புகளைக் கொண்ட சமூக அமைப்பு ஆர்எஸ்எஸ்.
கிரிராஜ்சிங்,
யோகி ஆதித்யநாத் ஆகியோரை மோடி பாராட்டியுள்ளது எதற்காக?
இந்திய பிரதமர் மோடி, கோபக்காரர்தான். ஆனால் முட்டாள்களால்
கஷ்டத்தை அனுபவிக்கும் சூழலை என்றுமே ஏற்றுக்கொள்ளாதவரும் கூடத்தான். தான் நினைப்பதை
சாதிக்க அவருக்கு விருப்பமில்லாத விஷயங்களை செய்துவருகிறார். விஹெச்பி, பஜ்ரங்தள்,
ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட அமைப்புகளிலுள்ளவர்களும் மோடியின் பிரதமர் பதவியைப் பெற முயன்றார்கள்.
ஆனால் அதனை மோடி பெற முடிந்தது. எப்படி? குஜராத்தில் முதல்வராக தன்னை நிரூபித்தவர்,
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி முன்னேறியவர் இன்று மக்களுக்கு நன்கு பழக்கமான
அவ்வியக்கத்தின் ஒரே முகம். இந்து தேசியவாதத்தை பொருளாதார வளர்ச்சியுடன் இணைத்து அமுல்படுத்துவதே
மோடியிட் திட்டம்.
அரசின் தலைவராக பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்ஸை அழுத்தங்களால்
ஏற்றுக்கொண்டு விட்டாரா?
பசு இறைச்சிக்காக கொல்லப்படுவதை எதிர்த்து ஆர்எஸ்எஸ்
நிறுவனர் கோல்வால்கர் வெளிப்படையாக பேசத்தயங்கியதை இன்று ஆர்எஸ்எஸ் சங்சாலக்கான மோகன்பகவத்
துணிச்சலாக பேசிவருகிறார். இது காலமும், அரசியலும் மாறிவதற்கு நிதர்சன சாட்சி. அதேநேரம்
ஆர்எஸ்எஸ், பாஜக அரசிடம் வலியுறுத்திய பல்வேறு பொருளாதார கொள்கைகளில் கம்யூனிச தாக்கங்கள்
இருந்தன. பின்னணியில் இருந்த ஆர்எஸ்எஸ் இன்று மக்களின் பார்வையில் படும்படி நிகழ்ச்சிகளை
நடத்தி வருவது அதன் கட்டமைப்பிற்கே புதிய ஒன்று.
இளம் அமைப்புகள் விதிகளில் சீர்த்திருத்தம்
வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா?
கல்வி தாய்மொழியில் அமையவேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்
கொள்கை. ஆனால் கோவாவில் ரோமன் கத்தோலிக்க மக்களுக்கு ஆபத்து ஏற்படும்படி விதிகள் மாற்றப்படாது.
மாட்டிறைச்சி உண்ணும் வடகிழக்கிலும் அதனை எதிர்க்குமாறு ஆர்எஸ்எஸ் செயல்படவில்லை என்பதை
கவனியுங்கள்.
பாஜவின் செயல்பாடுகளில் ஆர்எஸ்ஸின் அழுத்தம்
குறையத்தொடங்கிவிட்டதா?
வாஜ்பாய், அத்வானி போல அரசின் முடிவுகள் ஒவ்வொன்றுக்கும்
ஆர்எஸ்எஸ் தலைமையிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருப்பது மோடியின் தன்மையல்ல. முன்னர்
1980 ஆம் ஆண்டு அப்படி இருந்தது உண்மைதான். ஆனால் இன்று அப்படியல்ல. மோடி ஆர்எஸ்எஸ்சிலும்,
அதன் அரசியல் பிரிவான பாஜகவிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக தலைவராக உருவானது ஆர்எஸ்எஸ்
தலைமைக்கு பிடித்தமானதாக இல்லை என்றே எண்ணுகிறேன்.
ஆர்எஸ்எஸ்ஸின் சவால்களை எதனைக் கருதுகிறீர்கள்?
ராமகிருஷ்ண மிஷன் போல அரசுடன் இணைந்து தனித்தன்மை
இழக்கும் அபாயம், இந்துக்களை இணைப்பதிலுள்ள சாதித்தடைகள், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதிலுள்ள
தடைகள் உள்ளிட்டவை.
தமிழில்: ச.அன்பரசு