அமெரிக்காவின் நம்பிக்கை முகவர்கள்!





Image result for bryan stevenson



மாற்றத்தின் முகவர்கள்!




அமெரிக்காவின் தென்மாநிலங்களைச் சேர்ந்த சில நம்பிக்கை மனிதர்கள் மக்களின் வாழ்வில், பார்வையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர்...

Bryan Stevenson

நிறவெறி அடிமை முறை காரணமாக கருப்பின மக்கள் அமெரிக்காவின் தெற்கு புறத்திலிருந்து வடக்கு புறத்திற்கு இடம்பெயர்ந்த துயர வரலாறு பலரும் இன்று அறியாத ஒன்று. அலபாமாவைச் சேர்ந்த வழக்குரைஞரான பிரையன் கருப்பின மக்களின் வரலாற்றை அடுத்த தலைமுறை மக்கள் அறியும்படி இறந்த 4 ஆயிரத்து 400 மக்களின்(1877-1950) பெயர்களை பொறித்த நினைவகத்தை(National Memorial for Peace and Justice) மக்களின் ஆதரவுடன் அமைத்துள்ளார்."வெள்ளை இனத்தவர் பழிவாங்குவது என் நோக்கமல்ல; வரலாற்றை சரிவர அறிந்துகொள்ளாததுதான் மக்களின் பயத்திற்கு காரணம்(Just Mercy book)" எனும் பிரையன் நம் வரலாற்றை நாமறிவது அவசியம் என்கிறார் உறுதியான குரலில்.

Demario Davis
 Image result for Demario Davis

சினிமா பிரபலங்களை அல்லது தொழிலதிபர்களை தனது ரோல்மாடல்களாக மிசிசிபியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் டிமரியோ டேவிஸ் நினைக்கவில்லை. "பிறர் நலனிற்காக தன்னை எரித்துக்கொள்ளும் மார்டின் லூதர்கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் ஆகியோர்தான் சிறுவயதிலிருநது என் ஆதர்ச நாயகர்கள்" என வியப்பூட்டுகிறார் டேவிஸ். டிவோட்டட் ட்ரீமர்ஸ் எனும் அகாடமி தொடங்கி, ஏழைக்குழந்தைகளுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளோடு அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அகதி குடும்பங்களுக்கு 10 ஆயிரம் டாலர்களுக்கு மேல் நிதியுதவி அளித்த காருண்ய மனிதர் டேவிஸ்.





Paula Wallace

Image result for paula wallace


1977 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் பள்ளி ஆசிரியராக இருந்த வாலஸ், வேலையை விட்டு விலகி சாவன்னா கலைக்கல்லூரியைத் தொடங்கினார்.  மாணவர்களுக்கு புதுமைத்திறன்களை கற்றுக்கொடுக்கும் இப்பள்ளியில் படித்த 14 ஆயிரம் மாணவர்கள் பள்ளியின் பெருமைக்கு சாட்சியாக உலகெங்கும் பரவியுள்ளனர். இவரின் சம்பளம் குறித்து சர்ச்சைகள் வெடித்தாலும் ஜார்ஜியாவில் சாவன்னா பள்ளி செய்த சாதனைகள் அசாதாரணமானவை.

South Fulton Eight

அட்லாண்டாவிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சவுத் ஃபுல்டன் நகரில் நீதித்துறை சத்தமின்றி சாதனை செய்துள்ளது. கோர்ட்டில் பணிபுரியும்  நீதிமன்ற அதிகாரி லகேஷியா கோஃபீல்டு முதற்கொண்டு நீதிபதி டிஃபானி கார்டர்செல்லர்ஸ் வரையிலான எட்டுப்பேர்களும் கருப்பின பெண்கள்தான். இந்நகரில் கருப்பினத்தவர்களின் எண்ணிக்கை 90% இருந்தாலும் மாவட்ட நீதிபதிகளாக உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதம்தான்.

Nicole Hurd
Image result for Nicole Hurd


வடக்கு கரோலினாவைச் சேர்ந்த நிக்கோல் ஹர்ட், வர்ஜீனியா பல்கலைக்கழக டீன். 2005 ஆம் ஆண்டிலிருந்து 3 லட்சம் மாணவர்களை கல்லூரியில் இணைய வைக்க முயற்சிகளை செய்து ஜெயித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஒரு கோடி மாணவர்களை கல்லூரியில் இணையவைப்பதே இவரின் லட்சியம். 14 மாநிலங்களிலுள்ள 646 பள்ளிகளில் நிக்கோல் தன் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான தன்னார்வலர்களை உருவாக்கி வருகிறார்.