அயர்லாந்தில் வரி பித்தலாட்டம்!



Image result for ireland



வரியற்ற சொர்க்கம்!

பனாமா தீவு, மொரிஷியஸ், சிங்கப்பூர் என பலரும் லிஸ்டில் அடுக்குவார்கள். ஆனால் அயர்லாந்து நாட்டை பலரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.

 டப்ளின் நகரை தலைநகராக கொண்ட அயர்லாந்தின் மக்கள்தொகை 47 லட்சத்து 61 ஆயிரத்து 657. தனிநபர் வருமானம் 72 ஆயிரத்து 632 டாலர்களைக் கொண்ட இந்நாடு அமெரிக்க கம்பெனிகள் வரியற்ற லாபம் பெற சட்டப்பூர்வமாகவே உதவுகிறது என பெர்க்லி, கலிஃபோர்னியா, டென்மார்க் பல்கலைக்கழக பொருளாதார அறிஞர்கள் அறிக்கை(The Missing Profits of Nations) வெளியிட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் அயர்லாந்தில்(12.5% வரி) 106 பில்லியன் டாலர்கள், கரீபியன் தீவுகள் 97 பில்லியன், சிங்கப்பூர் 70 பில்லியன், நெதர்லாந்து 57 பில்லியன் என பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்துள்ளனர்.

"அதிக வர்த்தக செயல்பாடுகளின்றி பெரும் லாபம் என்றால் அதனைக் கவனிப்பது அவசியம்" எனும் பொருளாதாரவியலாளர் தாமஸ் தோர்ஸ்லோவ். இவரது குழு வெளிநாட்டு நிறுவனங்களின் வணிகநடவடிக்கைகளை கண்காணித்து மேற்கண்ட லாப சதவிகிதத்தை கணக்கிட்டுள்ளனர். ஆல்பபெட், ஹெச்பி, ஆப்பிள் உட்பட அயர்லாந்தில் துணை நிறுவனங்கள் தொடங்கி லாபத்தை தேற்றியவைதான். அமெரிக்காவில் வரி 21 சதவிகிதமாக அண்மையில் குறைக்கப்பட்டாலும் அங்கு வரி ஏய்ப்பு அதிகம். 2015 தகவல்படி உலக நாடுகள் 240 பில்லியன் டாலர் வரி வருமானத்தை இழக்கின்றன என்பது பொருளாதார மேம்பாடு மற்றும் கூட்டுறவு நிறுவனத்தின் தகவல்.