தலைநகருக்கு பாதுகாப்பு!








தலைநகருக்கு பாதுகாப்பு கவசம்!

 

இந்தியாவின் தலைநகரான டெல்லி விமானம், ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

வானில் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி வீழ்த்தும் அமெரிக்காவின் NASAMS-II பாதுகாப்பு அமைப்பை ஒரு பில்லியன் டாலர்களை செலவில் வாங்கவிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

ஏவுகணையின் வஜ்ர பாதுகாப்பில் ராஷ்டிரபதி பவன், நாடாளுமன்றம், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஆகியவை உள்ளடங்கும். நாஸம் ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டத்தில் 3டி ரேடார், சிறிய, நடுத்தர ஏவுகணைகள், வான்வழி தாக்குதலை சமாளிக்கும் தொழில்நுட்ப ஆயுதங்கள் ஆகியவை அமைக்கப்படவிருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்கா, ரஷ்யா, இஸ்‌ரேல் ஆகிய நாடுகளிலும் அமைக்கப்பட்டு தலைநகரங்கள் எதிரிகளின் சதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நகரங்களை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சமாளிக்க இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ, பிஎம்டி(ballistic missile defence (BMD)) எனும் ஏவுகணை அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது பாதுகாப்பை மெருகேற்றும் அட்டகாச முயற்சி.