உகாண்டாவுக்கு பசு!- மோடி கிஃப்ட்
உகாண்டாவுக்கு பசு தந்த மோடி!
டெல்லியை விட குறைவான மக்கள் தொகை கொண்ட ருவாண்டா நாட்டிற்கு 200 பசுக்களை பிரதமர் மோடி தானமாக வழங்கியுள்ளார். இரு நாட்டு நல்லுறவுக்கான பாலம் என இதற்கு பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
கிரிங்கா எனும் திட்டத்தின் அடிப்படையில் மோடி இந்தியப்
பசுக்களை ருவாண்டாவிலுள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். பிறக்கும் முதல் கன்றுக்குட்டியை பக்கத்து வீட்டினருக்கு வழங்க கிராமம் வளர்ச்சியுறும்
என்பது இந்திய அரசு நம்பிக்கை. இந்தியா உதவி செய்வதால் ருவாண்டா சீரழிந்த
நாடு என எண்ணவேண்டாம். அங்குள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில்
இருபங்கு பெண் உறுப்பினர்கள் உண்டு. நேரம் தவறாத பொதுப்போக்குவரத்து, சுத்தம் ஆகியவை அந்நாட்டின் சொத்து. 1994 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் நிறைவடைந்த பின்னர் அந்நாட்டின்
வளர்ச்சி இது. இந்தியா ருவாண்டாவுக்கு 400 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு பல்வேறு உதவித்தொகைகளையும் விவசாயம், கலாசாரம், பாதுகாப்பு, கால்நடைத்துறை திறன் பயிற்சிகளையும் வழங்கி சீனாவின் முற்றுகையை தடுத்து உறவை வளர்க்க
முயற்சி செய்து வருகிறது.