எழுந்து நின்று கைதட்டும் பழக்கம் வந்தது எப்போது?
எழுந்து நின்று கைதட்டுவோம்!
மறக்கமுடியாத, லெஜண்ட் சாதனைகளுக்கு, மனிதர்களுக்கு வரலாற்றில் மக்கள் எழுந்து
நின்று கைதட்டும்(standing ovation) கௌரவம் கிடைத்துள்ளது. இந்த கலாசாரத்தின் தோற்றம் ரோம் நகரில்
போர் வென்று திரும்பும் தளபதியை மக்கள் வரவேற்று உச்சிமுகர்ந்து பாராட்டும் பழக்கத்தில்
தொடங்கியது. நான் மகிழ்ச்சியடைகிறேன் எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து
உருவானதே ovation வார்த்தை.
1972 ஆம் ஆண்டு சார்லி சாப்ளினுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டபோது பனிரெண்டு நிமிடங்கள்
தொடர்ச்சியாக பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களின் உயரிய அங்கீகாரத்தை அவருக்கு
தெரிவித்தனர். 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று, பேஸ்பால் விளையாட்டு அரங்கில் கல் ரிப்கென் ஜூனியர் செய்த
சாதனைகளுக்கான பார்வையாளர்கள் தொடர்ச்சியாக 22 நிமிடங்கள் கைதட்டியது அவரை ஆச்சரியப்படுத்தியது. "விளையாண்டுகொண்டிருக்கும் நிலையில் நிற்காத கைதட்டுகளின் நீண்டநேர ஓசை என்னை மிரட்டிவிட்டது. முதலில் விளையாடுவோம், பிறகு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்வோம்" என கூறியிருக்கிறார் ரிப்கென்.