உணவு மானிய ஊழல்- தாய்லாந்து முன்னாள் பிரதமர் எஸ்கேப்





Image result for former thai pm yingluck shinawatra


பிரதமரை தேடும் தாய்லாந்து!

தாய்லாந்து ராணுவ அரசு, இங்கிலாந்தில் உள்ள முன்னாள் பிரதமரான யிங்லக் ஷினவத்ராவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. யிங்லக் தன் பதவிக்காலத்தில் அரிசி மானியத்தில் 8 பில்லியன் டாலர்கள் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு கிளம்பியபோதே யிங்லக் நைசாக இங்கிலாந்துக்கு எஸ்கேப்பாகிவிட்டார். அவர் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் கேட்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துவருகிறது. 2006 ஆம் ஆண்டு ராணுவ கலகத்தில் ஈடுபட்டுள்ளதாக யிங்லக்கின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான தக்‌ஷின் ஷினவத்ரா மீது புகார் கிளம்பியது. யிங்லக் தற்போது அவருடன் லண்டனில் பாதுகாப்பாக தங்கியுள்ளார். இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இருந்தாலும் இங்கிலாந்து இதற்கு இசைய வாய்ப்பு குறைவு. அண்மையில்தான் யிங்லக்கிற்கு 10 ஆண்டு தங்கியிருக்க விசா வழங்கியுள்ளது இங்கிலாந்து அரசு. 2014 ஆம் ஆண்டு ராணுவம் தாய்லாந்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் பிரயுத்சான் ஆச்சா ஜனநாயக தேர்தல் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தாலும் அரசியலமைப்பு சட்ட மாற்றம் மூலம் ராணுவத்திற்கு அதிக சக்தியை உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

பிரபலமான இடுகைகள்