ஆயூஷ்மான் பாரத் திட்டம் பற்றி அறிந்துகொள்வோம்!



Image result for ayushman bharat

அறிவோம் தெளிவோம்!

இந்திய அரசின் ஆரோக்கிய காப்பீட்டுத்திட்டமான ஆயுஸ்மான் பாரத், உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் என்றாலும் நடைமுறையில் சிகிச்சை செலவு கட்டுப்பாட்டினால் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அறுபது சதவிகித மருத்துவமனைகளில்(60,000-70,000) 30 சதவிகித படுக்கைவசதிகள் மட்டுமே உள்ளது என்பது உலகவங்கியின் தகவல். 3 ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே நூறு படுக்கைகள் கொண்டுள்ளன. விகிதம் 1:625.

மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் நிதியளிக்கும் திட்டப்படி 1,350 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம்.

மக்களுக்கான சுகாதாரத்திட்டத்தில் அரசின் செலவு 3.97%(2013), 1.15%(2017) என குறைந்து வருகிறது. தனிநபர் வருமானப்படி 69 டாலர்(2013), 58 டாலர்(2017) என செலவிட்டுள்ளது. மாநில அரசின் சுகாதாரத்திட்டங்களை முடக்கும் என வல்லுநர்கள் அச்சப்படும்  ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஆயுஸ்மான் பாரத்தின் காப்பீட்டு பிரீமியத்தொகை
ரூ.1,200 மட்டுமே.