சூழல் திட்டங்களின் விலை என்ன?






சூழல் திட்டங்களின் விலை என்ன?

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் அரிய உயிரிகளை பாதுகாக்கும் சட்டத்தில்(ESA) கையெழுத்திட்ட நொடியிலிருந்து இன்றுவரை அச்சட்டத்தின் மீது விமர்சனங்கள் குறையவில்லை. எண்ணெய் மற்றும் இயற்கைவாயுத் தொழில்துறையினர், வளர்ச்சியை இச்சட்டம் தடுக்கிறது என கரன்சி தேற்ற முடியாத விரக்தியில் புலம்புகிறார்கள். மறுபுறம், விவசாயிகள் தம் நிலத்தை மேம்படுத்த சட்டம் தடையாக இருக்கிறது குறை கூறிவருகின்றனர்.

அமெரிக்காவின் வழுக்கைத் தலை கழுகு பிழைத்திருக்க இதுபோன்ற கடின சட்டங்களே காரணம். இயற்கை வளத்தை காத்ததால் அமெரிக்காவுக்கு 1.6 ட்ரில்லியன் டாலர்களை மதிப்புக்கு பயன்கள் கிடைத்துள்ளன என்கிறது தேசிய மீன் மற்றும் கானுயிர் அமைப்பின் அறிக்கை. தொழில்துறை வளர்ச்சி என்பதை விட ஒட்டுமொத்த சூழலை காப்பதில் இவ்விதி முக்கிய பங்காற்றியுள்ளது என்பதே சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் வாதம். தற்போது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இச்சட்டத்தில் வணிக நிறுவனங்களின் கருத்துக்களுக்கேற்ப பல்வேறு திருத்தங்களை இதில் மேற்கொண்டு வருகிறது.