அல்ஸீமர் ஆராய்ச்சியில் புதுமை!




Image result for alzheimer


அல்ஸீமரை தடுக்கலாம்!

ஆல்கஹால்

அமெரிக்காவில் 9 ஆயிரம் பேர்களிடம் நடத்திய ஆய்வில், குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 74% அல்ஸீமர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஆல்கஹால் மூளையிலுள்ள நியூரான்களை தாக்கி உடல் இயக்கங்களை பாதிக்கிறது என்பது அறிவியலாளர்களின் உறுதியான நம்பிக்கை. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்ற வகையில் இதனை அல்ஸீமருக்கு உதவும் என பரிந்துரைக்கிறது ஆய்வாளர்கள் குழு.

போதைப் பொருட்கள்

மூளையில் அமிலாய்டு புரதத்தை தடுத்து சிந்திக்கும் திறனை அதிகரிக்க BAN2401 என்ற மருந்து பயன்படுகிறது. இதற்கடுத்து நம்பிக்கை அளிக்கும் மருந்தாக aducanumab உள்ளது. அடுத்தடுத்த சோதனைகளில் இம்மருந்துகள் சிறப்பாக செயல்பட்டால் உடலின் ரத்த அழுத்தத்தை குறைத்து யோசிப்பதையும், இயங்குவதையும் கட்டுப்படுத்தும் அல்ஸீமரை சமாளிக்கலாம்.

பிரசவம்

இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்ற பெண்கள், ஒரே ஒரு குழந்தையைப் பெற்ற பெண்களை விட அல்ஸீமரால் தாக்கப்படும் வாய்ப்பு 12 சதவிகிதம் குறைவு. இதற்கு பெண்களின் உடலிலுள்ள அவர்களின் ஆதார ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் விகிதம் மாறுபடுவதும் முக்கியக் காரணம்.