உர்சல் திட்டம் தெரியுமா?


பிரேசிலை கலக்கும் கரடி!
Image result for Ursal

பிரேஸிலில் விரைவில் அதிபர் தேர்தல் தொடங்கும் நிலையில் உர்சல்(Ursal-Union of the Socialist Republics of Latin America) எனும் கம்யூனிஸ்ட் கரடிதான் இணையத்தை கால்பந்துக்கு அடுத்தபடியாக கலக்கி வருகிறது. பல்வேறு மீம்களின் வழியாக இதனை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வலதுசாரி கட்சிகள் தங்களின் இணையப்பிரசாரத்தில் இக்கரடியை பயன்படுத்தி வருகின்றனர்.
பிரேஸிலின் பேட்ரியாட்டா எனும் சிறிய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த காபோ டேசியாலோ, "உர்சல் திட்டப்படி நாட்டை கம்யூனிய நாடாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இந்த முயற்சி நிறைவேற அனுமதிக்கக்கூடாது" என அதிபர் தேர்தல் விவாதத்தில் கொளுத்திப்போட விஷயம் சூடுபிடித்தது. உர்சல்என்றால் கரடி என்பது போர்ச்சுக்கீசிய அர்த்தம். உர்சல் கரடியின் வரைபடம், லோகோ, சுலோகன், தேசியகீதம், கால்பந்து அணி என இணையத்தில் பலரும் உருவாக்கி குவிக்கத் தொடங்கினர்.
உர்சல் புரோஜெக்ட் என்பது 2001 ஆம் ஆண்டு பேராசிரியர் மரியா லூசியா விக்டர் பார்போஸா என்பவர் சாவோ பாலோ நகரில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்க, கரீபியன் இடதுசாரிகளின் மாநாட்டை கிண்டல் செய்யும் விதமாக உருவாக்கினார். அச்சமயத்தில் அமெரிக்க நாடுகளில் தாராள வணிகத்தை பில்கிளிண்டன் ஊக்குவிக்க அதனை முன்னாள் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா எதிர்த்தார். "காஸ்ட்ரோ-சாவேஸ்-லுலா கூட்டணியில் இடதுசாரி தேசம் உருவாகப்போகிறதோ?," என கிண்டல் செய்திருந்தார் பேராசிரியர் பார்போஸா.  


பிரபலமான இடுகைகள்