செயற்கை இனிப்பு என்ன செய்யும்?



Image result for artificial sugar

செயற்கை இனிப்பின் அச்சுறுத்தல்!

டயட் என்றதும் முதலில் சர்க்கரையை தவிர்த்து செயற்கை இனிப்பை தேர்ந்தெடுப்பதே புதிய ஸ்டைல். ஆனால் அது சரியானதா என்பதே பலரின் கேள்வி. சூயிங்கம், குளிர்பானங்கள், ஜெல்லி, மிட்டாய்கள் உள்ளிட்டவற்றில் இடம்பெறும் செயற்கை இனிப்புகளை சுவை உணரும் திறன்களை அழித்துவிடும் என அச்சுறுத்துகிறது வல்லுநர் வட்டாரம்.

"நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் பிரச்னையுள்ளவர்கள் செயற்கை இனிப்பை(
Aspartame, Sucralose, Saccharin, Acesulfame Potassium  Stevia) மாற்றாக தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இவை நாக்கின் சுவைமொட்டுக்களை அழித்து பழங்கள் சாப்பிட்டால் கூட அதன் சுவையை அறியமுடியாமல் செய்துவிடும்" என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான முகமது யூசுப் என். ஷேக். இதற்கு ஒரே தீர்ப்பு, கருப்பட்டி, வெல்லம், தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை மட்டுமே. செயற்கை இனிப்பு கலந்த பொருட்களை உண்பதால்  ஒற்றைத்தலைவலி, வாந்தி, குமட்டல், உடல்பருமன் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் என்பது உணவு வல்லுநர்களின் வாக்கு. இயற்கைக்கு திரும்புவது உடலின் இயல்புக்கு நல்லது.










பிரபலமான இடுகைகள்