இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் தரம் என்ன?




Image result for world top 100 university



அறிவோம் தெளிவோம்!

 உலகளவிலான பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் இடம் 420.  328(2014), 341(2015), 354(2016) என உலகளவிலான ரேட்டிங்கில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

தரவரிசைப்பட்டியல் ஆராய்ச்சி அறிக்கைகள் அளவு, தரம் பொறுத்து அளிக்கப்படுகிறது. மத்திய பல்கலையில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர் பணியிடங்கள்(33%) நிரப்பப்படாமல் உள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் சத்யபால்சிங் மக்களவை அறிக்கையில்(ஜூலை23,2018) கூறியுள்ளார். இதில் ஐஐடியில் மட்டும் 2 ஆயிரத்து 802 பணியிடங்கள்(34%) காற்று வாங்குகின்றன

"கடந்த இருபது ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில்  புறக்கணிப்பு நிலவுகிறது" என்கிறார் ஹைதராபாத் பல்கலையைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியரான லஷ்மி நாராயணன். இந்திய அரசின் 4.13%(2014) கல்வி ஒதுக்கீடு விகிதம் இங்கிலாந்து(5.68%), அமெரிக்கா(5.22%), தென் ஆப்பிரிக்கா(6.05%) நாடுகளை விட குறைவு. 2018-2019 டாப் 100 பட்டியலில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் 51, இங்கிலாந்தில் 8 பல்கலைக்கழகங்களும் தேர்வாகியுள்ளன.



பிரபலமான இடுகைகள்