விஸ்வரூப இரான்!
ஆயுதக்குழுக்களுக்கு உதவுகிறதா இரான்?
இரானின் IRGC(Islamic Revolutionary Guard Corps) 2015 ஆம் ஆண்டிலிருந்தே மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள பல்வேறு
ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதம், நிதி, பயிற்சி என பல்வேறு வகையில் உதவிகளை வாரி வழங்கி வருகிறது. தரைக்கடல் வழியில் ஆயுத சப்ளைகள் பிரச்னையின்றி நடைபெற்று வருகின்றன.
Hizballah
லெபனானில் செயல்பட்டுவரும் உலகளவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத
இயக்கம். இஸ்ரேல், அமெரிக்கா இருநாடுகளுக்கும் எதிரான
ஆபரேஷன்களுக்கு இரான் ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் அளிக்கிறது.
Saraya Al-ashtar
பஹ்ரைன் நாட்டு மன்னர் ஹமாத் அல் காலிபாவுக்கு எதிராக
பல்வேறு தாக்குதல்களை நடத்திவரும் ஷிட்டே மக்களைக் கொண்ட ஆயுதக்குழுவையும் இரான் ஆதரிக்கிறது.
சிரியாவின் அதிபர் பஷார் அசாத் பின்னணியில் இரானின் quads force ஆயுதம் மற்றும் உளவு உதவிகளை செய்துவருகிறது. இரானின் எலைட் பிரிவான க்வாட்ஸ், தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சியளிப்பதும், நிதியளிப்பதுமே முக்கியப்பணி.
இராக்கிலுள்ள சன்னி தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவத்துடன்
இணைந்து போராடும் ஹசாத் அல் ஷாபி எனும் ஆயுதக்குழுவையும் இரான் ஆதரித்து வருகிறது.