கங்கையை சுத்தம் செய்கிறார் இளைஞர் ஒருவர்!





Image result for clean ganga arvindsingh




கங்கையின் மகன்!

Image result for clean ganga arvindsingh


உத்தர்கண்ட் மாநிலத்தின் தேவ்பிரயாக் பகுதியைச் சேர்ந்த அர்விந்த்சிங் ஜியால், கங்கையை சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் 20 பேர் கொண்ட தன்னார்வலர் டீமுடன் ஓராண்டிற்கும் மேலாக உழைத்து வருகிறார். நமாமி கங்கே திட்டத்தின் கீழ் கங்கையை சுத்தப்படுத்தும் செயல்பாடு (NMCG) இது.

ஆற்றின் படுகையிலிருந்து குப்பைகளை அகற்றுவது, மரக்கன்றுகளை பதியமிடுவது, சூழல் பட்டறைகளை நடத்துவது என அர்விந்தின் பணிகள் பரபரக்கின்றன. "இளைஞர்களிடம் கங்கையை அசுத்தப்படுத்தாமல் இருப்பது குறித்து எளிதாக பேசிவிடலாம். ஆனால் நம்மிலும் மூத்தவர்களை பேசி சம்மதிக்கவைப்பது சிரமம். நாங்கள் ஆற்றுப்படுகை கரையோரமாக நட்ட அறுபதிற்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. வியாபாரிகள் பாலீதின் பைகளை பயன்படுத்தாமல் இருக்க கேட்டுக்கொண்டுள்ளோம்" என அடக்கமாக பேசுகிறார் அர்விந்த்சிங் ஜியால். 427 பேர் கொண்ட பிரகாரி எனும் தன்னார்வலர்கள் குழு, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய கங்கை வழித்தடங்களிலுள்ள மாநிலங்களிலும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


2
ஒரு மாணவிக்காக இயங்கும் பள்ளி!


ஹரியானாவின் ரேவாரியிலுள்ள லூகி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தயா கிஷன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரூ.70 ஆயிரம் மாத சம்பளம் வாங்கும் கிஷன் எத்தனை மாணவிகளுக்கு சிரமப்பட்டு பாடம் சொல்லித்தருகிறார் தெரியுமா? ஏழாம் வகுப்பில் படிக்கும் குசும் குமாரி என்ற ஒரேயொரு மாணவிக்கு மட்டும்தான்.

"நான் சமூக அறிவியல் ஆசிரியர். ஆனால் இம்மாணவிக்கு அனைத்து பாடங்களையும் கற்றுத்தர முயற்சித்துவருகிறேன். கணக்கில் நான் சிறப்பான ஆசிரியர் அல்ல என்றாலும் சமாளிக்கிறேன்" என்கிறார் கிஷன். மூன்று அறைகள் கொண்ட பள்ளியில் இவர்கள் இருவரும் மட்டும்தான் ஆசிரியர்- மாணவி. 2016 ஆம் ஆண்டு 22 மாணவிகள் படித்த பள்ளி கடந்தாண்டில் பனிரெண்டாக குறைந்து தற்போது ஒரே ஒரு மாணவி என்ற நிலைக்கு வந்துவிட்டது. "குசும் குமாரி அப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்படி அந்த பள்ளியை மூடுவது?" என விமர்சனங்களுக்கு பதில் கூறுகிறார் மாவட்ட கல்வி அதிகாரியான சுரேஷ் கொரியா. ஒராண்டுக்கு இப்பள்ளிக்கு மட்டும் கல்வி அமைச்சகம் 8.5 லட்ச ரூபாய் செலவழித்து வருகிறது.

3

விவசாயக்கடன் மோசடி!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்க்கரை ஆலை வணிகர் விவசாயத்தின் பெயரில் வாங்கிய ரூ. 5 ஆயிரத்து 400 கோடியை பிஸினஸில் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

"போலி விவசாயிகளின் பெயர்களை வைத்து ஆவணங்களை தயாரித்த ரத்னாகர் குட்டே என்ற வணிகர், 5 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்துள்ளார்" என குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர்(NCP) தனஞ்செய் முண்டே. பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்னாகர் குட்டே, கங்காகெட் சுகர் மற்றும் எனர்ஜி நிறுவனத்தை நடத்தி வந்தார். 2015 ஆம் ஆண்டு ரத்னாகர், 600 போலி விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் கோரிப்பெற்று தன் சகோதர நிறுவனங்களில் முதலீடு செய்தார். இதுகுறித்து வணிகர் ரத்னாகர் மீது குற்றம்சாட்டி புகார் பதிவானாலும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் மாநில அரசை நிர்பந்தித்து வருகின்றன. 

4



உரமா? உணவா?

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா குழந்தைகளைவிட ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகளின் உணவில் 40 சதவிகிதம் ரசாயனப்பொருட்கள் இருப்பதை தேசிய ஊட்டச்சத்துக்கழகம்(NIN) கண்டறிந்துள்ளது.

ஆறிலிருந்து பதினைந்து வயதிட்குட்பட்ட 377 சிறுவர்களின்(188 ஆண்கள், 189 பெண்கள்) சிறுநீர் மாதிரிகளை ஆராய்ந்து அவர்களின் உடலில் ஆர்கனோபாஸ்பேட்(OP) எனும் உடலுக்கு ஆபத்தான வேதிப்பொருள் இருப்பதை ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். 6-10 வயதான சிறுவர்களுக்கு 4.1 மைக்ரோமோல் இருப்பது அதிர்ச்சி செய்தி. உடலின் வேதிமாற்றத்தினால் ஆர்கனோபாஸ்பேட், டைஅல்கைல் பாஸ்பேட்(DAP) ஆகி உருவாகும் அளவும் அமெரிக்கா(0.101), கனடா(0.099) குழந்தைகளை விட இந்தியாவில் அதிகமாக(0.334-0.356) உள்ளது. "காய்கறிகள், பயிர்கள் நீண்டநாட்கள் கெடாமல் தாக்குப்பிடிக்கவும் விளைச்சல் அதிகரிக்கவும் விவசாயிகள் பயன்படுத்தும் எண்ணற்ற வேதிஉரங்களின் பாதிப்பு இது" என்கிறார் மருத்துவர் சஷிபூஷன் வெமூரி.

ஆக்கம்: உக்கிரபுத்தன்