முதலைக்கடி வாங்கிய பயிற்சியாளர்!
பிட்ஸ்!
சிக்னலில் வேலைவாய்ப்பு!
அமெரிக்காவில் சிலிக்கன் வேலிக்காரரான டேவிட் கஸாரெஸ்"வீடற்றவன்;பசியோடு இருக்கிறேன். என்னுடைய ரெஸ்யூமை கொஞ்சம் பாருங்கள்" என போர்டுடன் ட்ராஃபிக் சிக்னலில் வேலை தேடி நின்றார். உடனே அவரது கோரிக்கை ட்விட்டரில் வைரலாக, தற்போது கூகுள், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன. வேலை உங்கள் சாய்ஸ்!
ஜஸ்ட் முதலைக்கடி!
தாய்லாந்தின் சியாங்ராயிலுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு பூங்காவான
போக்கதாராவில் முதலை சாகசங்கள் வெகு பிரபலம். அன்றும் அப்படித்தான் பயிற்சியாளர் குன் புசாவிட் முதலையின் வாயில் கைவைத்து சாகசம்
செய்தார். அப்போது திடீரென முதலை வாயை லாக் செய்ய புசாவிட்டின் கை
உள்ளே மாட்டிக்கொண்டது. ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் சூழ்ந்திருக்க
நடந்த பெரும்போராட்டத்தில் புசாவிட்டின் கையோடு அவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோபம் வர்ற மாதிரி வீரச்செயல் எதற்கு?
தமிழ்பேசும் சீனக்கண்மணி!
சீனப்பெருஞ்சுவரை சீனப்பெண் தமிழில் அறிமுகம் செய்து பேசும்
வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஹிட். மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா இவ்வீடியோவை
பகிர்ந்து "தமிழ் மொழியின் பெருஞ்சுவர்" என சீனப்பெண்ணுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வணக்கம் தொடங்கி சீனப்பெருஞ்சுவரை கொஞ்சும் தமிழில் அம்மணி விளக்குவது கொள்ளை அழகு.
சிவப்பு ரோஜா சந்தேகம்!
லக்னோவில் சாலைவிதிகளை பின்பற்றிய டூவீலர் மனிதருக்கு
சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சகி ரோஜா கொடுத்து வாழ்த்தியது வினையானது. ரெட் ரோஸூடன் வீட்டுக்கு சென்ற வாலிபரை மனைவி டவுட்டுடன் கேள்விகளால் வறுத்தெடுத்தார். மிரண்ட வாலிபர் பிரேமிடம் அவர் ரோஜா கொடுத்தபோது எடுத்த போட்டோவை வாங்கி மனைவியை
சமாதானப்படுத்திய செய்தியை பிரேம் சமூகவலைதளத்தில் வெளியிட பதிவு காமெடி நெ.1 ஆகியுள்ளது.