பொக்கிஷப்புதிர்!
தொல்பொருள் புதிர்!
AN ANCIENT PUZZLE
முட்டை வடிவிலான இப்புதிர் உலோகத்தை இங்கிலாந்தில் தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் 1739 ஆம் ஆண்டு கண்டுபிடித்து தோராயமாக 300 ஆண்டுகளாகின்றன. தொன்மையான நாணயங்கள், வெண்கலம் கலந்து செய்யப்பட்ட 12 பக்கங்களைக் கொண்ட உலோகம் இது. வெவ்வேறு அளவிலான துளைகளைக் கொண்ட இப்புதிர் உலோகம் எதற்கு என்பது இன்றுவரை மர்மமாக
உள்ளது.
மெல்லிய எடையிலான இந்த உலோகப்பொருளை ஆயுதமாக ரோமானியர்கள்
பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் யூகம். ஆனால் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி கயிற்றில் பயன்படுத்திய உலோக ஆயுதங்கள் எதுவும்
புதிர் உலோகத்தை ஒத்ததில்லை. "ஆயுதமாக இந்த உலோகத்தை பயன்படுத்தினார்கள்
என்று உறுதியாக எப்படி கூறமுடியும்? குறிப்பிட்ட தொலைவை அளவிடக்கூட பயன்படுத்தி
இருக்கலாமே?" என மாற்றி யோசிக்க தூண்டுகிறார் இத்தாலியைச் சேர்ந்த இயற்பியலாளர்
அமெலியா ஸ்பாராவிக்னா. இதற்கான ஆதாரமான பனிரெண்டு பக்கங்களிலுள்ள மாறுபட்ட அளவிலுள்ள
துளைகளை காட்டுகிறார் அமெலியா. ஆனால் இதில் அளவைக்கான கணிதக்குறியீடுகள்
இல்லாதது அமெலியாவின் வாதத்தை பலவீனமாக்குகிறது.