இடுகைகள்

கிளப்ஹவுஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?

படம்
              கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான் . இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது . கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது . உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர் . இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம் . பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம் . அரசியல் , சினிமா , செக்ஸ் , ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம் . பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம் . பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும் . கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை . வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன . பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது . ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது .

கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா? - கிளப்ஹவுஸ் ஆப் வெற்றி பெறும் ரகசியம்

படம்
          கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா ? மிர்ச்சி சிவசங்கரி அன்போடு அழைக்கும் லேட் நைட்ஷோவின் தலைப்புதான் இது . கிளப் ஹவுஸ் ஆப்பின் புகழுக்கும் இதேதான் காரணம் . இந்த ஆப்பின் விசேஷம் இதனை ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்த முடியும் . யாராக இருந்தாலும் உடனே பேஸ்புக் போல உள்ளே நுழைந்து விட முடியாது . அங்குள்ளவர்கள் யாராவது உங்களை அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் . டிஜிட்டல் அழைப்பிதழ்தான் . அப்படி அழைத்து உள்ளே வருபவர்கள் மாடரேட்டர் என்பவர்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள் . அங்கு ஜாலியாக அ முதல் ஃ வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம் . உடனே உற்சாகமாகும் உள்ளங்கள் கவனிக்க . இங்கு உறுப்பினராகுபவர்கள் அனைவரும் தங்கள் உண்மையான பெயரையே பயன்படுத்த வேண்டும் .    கிளப் ஹவுஸ் ஆப் இந்த ஆப்பின் வசதிக்கு முக்கிய காரணம் , இதில் நீங்கள் தகவல்களை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் . இதன் காரணமாக , அரசியலோ , ஆன்மீகமோ , ஆண்மைக்குறைவோ எதுவாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு நெருக்கமாக தோன்றும் இதனால் இந்த ஆப்பில் இணைவதற்காகவே பல இந்தியர்கள் ஐபோன்களை வாங்க முயல்கின்றனர் . வெளிப்பட