இடுகைகள்

ஆலோசனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறவுகளை சீரமைத்தாலே மனநிலை குறைபாடுகளை தீர்த்துவிடலாம்! - வில்லியம் கிளாசர்

படம்
  மனிதர்கள் என்பவர்கள் சமூக விலங்குகள். இன்று பெருகியுள்ள தொழில்நுட்ப வசதிகளால் நிறைய மனிதர்கள் நெருக்கமாகி இருக்கமுடியும். ஆனால் சிலர் நெருக்கமாக இருந்தாலும் பலர் விலகி மனதளவில் தொலைதூரத்தில் இருப்பது போல சூழல் உள்ளது. இதைப் பற்றித்தான் வில்லியம் கிளாசர் என்ற உளவியலாளர் ஆய்வுசெய்து சாய்ஸ் கோட்பாட்டை உருவாக்கினார்.  மகிழ்ச்சி, பிழைத்திருத்தல், அதிகாரம், சுதந்திரம், வேடிக்கை என்பது அனைத்து மனிதர்களின் தேவை. அதை நோக்கித்தான் வாழ்க்கை முழுக்க ஓடுகிறார்கள். ஆனால் இந்த தேவைகளை அனைவரும் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அதில் தோல்வி பெறுபவர்களுக்கு துன்பம், அவநம்பிக்கை, விரக்தி உருவாகிறது. இதை தீர்க்க மனநல மருந்துகளை சாப்பிட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. அவை மூளையிலுள்ள வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான இனிய உறவுகளை தேடி உருவாக்கிக்கொண்டால் நல்ல மனநிலையோடு, மகிழ்ச்சியும் உருவாகும் என உளவியலாளர் வில்லியம் கிளாசர் விளக்கினார்.  மனிதர்கள் சமூக விலங்குகளாக உருவாகிறார்கள். இதற்கடுத்து காதலும், சொத்துகளும் தேவையாக உள்ளன. உயிர் பிழைத்திருப்பதற்கு

பெண்ணியம் காக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்! - பெண்களுக்காக ஆலோசனை தரும் உயிரா தமி்ழ் குழு

படம்
                பெண்களுக்காக கொடி பிடிக்கும் ஆண் ! இன்ஸ்டாகிராமில் உயிரா தமிழ் எனும் பக்கத்தை திறந்தால் முழுக்க பெண்களுக்கு ஆதரவான வாசகங்கள் தென்படுகின்றன . கெட்டப்பெண் என்று எப்படி பெண்களை வரையறை செய்கிறார்கள் என்பது முதல் இணையத்தில் பெண்களுக்கு லைக் போட்டு காதலிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கோளாறுகள் வரை புட்டு வைக்கிறார் மனிதர் . யார் இவர் ? குடிமைத் தேர்வுகளுக்காக படித்து வருபவர் , பெண்களுக்கான உரிமைகள் , சிக்கல்கள் , சமூகம் எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை எளிதாக சிறு வாக்கியங்களில் பேசி வருகிறார் . நான் ஒரு ஆண் . பெண்ணியத்திற்கு வரையறை சொல்லுவதற்காக இதனை செய்யவில்லை . நான் இந்த செயல்பாட்டில் எனது அறியாமையைத்தான் முன் வைக்கிறேன் . அதில்தான் கற்றும் கொள்கிறேன் என்று பேகிறார் ஜீவ சரவணன் . விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவர் சென்னைக்கு குடியேறி இப்போது சி்ந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கிவருகிறார் . இவரது பக்கத்தைப் பார்த்து பல பெண்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்களுக்கும் தீர்வு தேடி வருகின்றனர் . இப்படி பலரும் இணைந்து ஒரு குழுவே உருவாகியிருக்கிறது . இதனை

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லையா?

படம்
giphy.com டாக்டர். எக்ஸ் படுக்கையில் படுக்கப்போகும்வரை தூக்கம் வருவது போலிருக்கிறது. ஆனால் பெட்டில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஏன்? காரணம் படுக்கையை நீங்கள் தூங்க மட்டும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். அதில் உட்கார்ந்து போனை நோண்டுவது, நெட்பிளிக்ஸ் தொடர்களை பார்ப்பது எல்லாம் செய்தால் எப்படி? முடிந்தவரை ஆறுமணிக்கு மேல் காஃபீன் பானங்களை குடிக்காதீர்கள். அவை மூளையிலுள்ள ஏராளமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு நடுராத்திரியிலும் உங்களை கொக்கரக்கோ கோழியாக்கி விடும். நல்ல கம்பெனி படுக்கையைப் பயன்படுத்துங்கள். இது அடிப்படையானது. அதற்குமேல் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் உறுதியாக உளவியலாளரை அணுகியே ஆகவேண்டும். வயதாகும்போது தூக்கம் குறையும் என்பதால் அதற்கேற்ப உணவுப்பழக்கங்களை குடும்ப மருத்துவரை அணுகிப் பெறுவது நல்லது. கார்ல்மார்க்ஸின் நூலைக் கூட படிக்கலாம்.  த த்துவ நூல்களைப் படிக்கும்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் தூங்கியிராதது போல அடித்து போட்டது போல தூங்க முடியும்.  ஆசானின் வெண்முரசு போன்ற நூல்களும் உதவும். நன்றி - மென்டல் ஃபிளாஸ்

மனநல பிரச்னையால் தவிக்கும் இந்தியா!

படம்
pinterest பொதுவாக உடல்நல பிரச்னைகளையே இந்தியர்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை. ஏதாவது ஒன்றிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் இப்போது மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதுபற்றிய கவனமும் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இறப்பதற்கான காரணம் எதுவாக இறந்தாலும் இப்படி அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோவது ஆபத்தான அறிகுறி. அங்குள்ள யவட்மால் மாவட்டத்தில் மட்டும் ஜூலை வரை 139 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலைகளைத் தடுக்க பிரேர்னா பிரகல்ப் எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இங்குள்ள பதினான்கு மாவட்டத்தில் ஆஷா பணியாளர்கள் இதற்கான பணியாற்றி வருகின்றனர். முழுமையான உளவியலாளர்கள் இத்திட்டத்திற்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. அறுபதாயிரம் ஆஷா பணியாளர்கள் எப்படி தங்களின் பணிச்சுமையோடு இப்பணியை செய்வார்கள் என்று தெரியவில்லை. இதில் பாதியளவிலான பணியாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.