இடுகைகள்

உக்ரைன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  விக்டோரியா ரெபா, பெட்டர்மீ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்,   உக்ரைன் நாட்டில் டெக் துறை சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும், அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன் நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும் தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும். ரஷ்யாவின் போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது.   இதன்படி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்றையும் மெல்ல இ

உக்ரைனுக்கு சென்று எனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்! - மரியா ரியாபோஸாப்கா

படம்
  மரியா ரியாபோஸாப்கா உக்ரைன் நடிகை இவரது முழுப்பெயரை சொல்லுவதற்குள் நாக்குக்கு சுளுக்கு பிடித்துக்கொள்ளும். அதனால் மரியா என்பதே போதுமானது. இவர்தான் அடுத்த எஸ்கே 20 படத்தில் சிவாண்ணாவின் ஜோடிக்கிளி. இவரிடம் பேசினோம்.  எஸ்கே 20 படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் நடித்த வெப் சீரிஸ் ஸ்பெஷல் ஆப்ஸ் 1. 5, உக்ரைனில் படம்பிடிக்கப்பட்டது. அதில் நான் நடித்திருந்தேன். இத்தொடர் வெளியான பிறகு எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பிறகுதான் எஸ்கே 20 படக்குழுவினர் என்னை தொடர்பு கொண்டனர். கதையும் எனது பாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டேன்.  இந்திய சினிமாவைப் பார்க்கிறீர்களா? கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்திய மக்களுக்கு திரைப்படங்களும், அதில் நடிக்கும் நடிகர்களும் அவ்வளவு பிடித்திருக்கிறது. 3 இடியட்ஸ் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உங்களை அதிக இந்தியப் படங்களில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா? நான் அதிகளவு படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்தியாவில் வேலை பார்க்க எனக்கும் ஆசையிருக்கிறது. உங்களது திரைப்படத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப

போரில் கிடைத்த வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்!

படம்
  ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. இதுதொடர்பாக நிறைய வார்த்தைகளை நாம் கேட்டுவருகிறோம். அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  கொய்ட் quit ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என்ற நிறைய நாடுகள் முடிவெடுக்க நினைத்தன. அப்படி செய்தால் போர் நின்றுவிடுமே என ஐரோப்பிய யூனியன் கூட ரஷ்யாவின் நிலக்கரியை மட்டும் பயன்படுத்த மாட்டோம் என கறாராக கூறிவிட்டது.  நாடோ nato உக்ரைன் ஐரோப்பாவின் நாடோ படையில் சேரக்கூடாது என்பதுதான் ரஷ்யாவின் பயம். அதற்காகவே உக்ரைனை தாக்கி அதனை சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. ஆனால் ரஷ்யாவின் வேகத்தில் இதுவரை நாடோவில் சேராமலிருந்த ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கூட சேர்ந்தால்தான் என்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டன.  ஷி ஜின்பிங் xi jinping சீனா, இல்லாமல் இனி உலகில் எதுதான் நடந்துவிடும். இதன் நிரந்தர அதிபரான ஷி, எப்போதும் போல ரஷ்யாவை ஆதரிக்கிறார். ஒருவகையில் சீனாவின் இந்த ஆதரவுநிலையால் தைவான், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அடுத்தது நாமதானோ என பீதியில் உள்ளன.  லூகாசென்கோ lukashenko இவர் பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லூகாசென

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு