உக்ரைனுக்கு சென்று எனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்! - மரியா ரியாபோஸாப்கா

 






மரியா ரியாபோஸாப்கா

உக்ரைன் நடிகை






இவரது முழுப்பெயரை சொல்லுவதற்குள் நாக்குக்கு சுளுக்கு பிடித்துக்கொள்ளும். அதனால் மரியா என்பதே போதுமானது. இவர்தான் அடுத்த எஸ்கே 20 படத்தில் சிவாண்ணாவின் ஜோடிக்கிளி. இவரிடம் பேசினோம். 

எஸ்கே 20 படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்?

நான் நடித்த வெப் சீரிஸ் ஸ்பெஷல் ஆப்ஸ் 1. 5, உக்ரைனில் படம்பிடிக்கப்பட்டது. அதில் நான் நடித்திருந்தேன். இத்தொடர் வெளியான பிறகு எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பிறகுதான் எஸ்கே 20 படக்குழுவினர் என்னை தொடர்பு கொண்டனர். கதையும் எனது பாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டேன். 

இந்திய சினிமாவைப் பார்க்கிறீர்களா?

கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்திய மக்களுக்கு திரைப்படங்களும், அதில் நடிக்கும் நடிகர்களும் அவ்வளவு பிடித்திருக்கிறது. 3 இடியட்ஸ் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

உங்களை அதிக இந்தியப் படங்களில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

நான் அதிகளவு படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்தியாவில் வேலை பார்க்க எனக்கும் ஆசையிருக்கிறது. உங்களது திரைப்படத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போதைக்கு நான் எனது உறவினர்களை பார்க்க ஆசைப்படுகிறேன். அவர்கள் ஜெர்மனியிலும் உக்ரைனிலும் இருக்கிறார்கள். 

திரைப்பட பிரபலமாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டை இந்த கடினமான காலகட்டத்தில் ஆதரிப்பீர்களா?

எனது நாடுதான் எனக்கு இலவச கல்வியை அளித்தது. திரைப்பட தொழிலில் ஈடுபடவும் தொடக்கத்தை கொடுத்தது உக்ரைன்தான். இப்போது நான் எனது பங்கை நாட்டிற்கு செலுத்த வேண்டியுள்ளது. போலந்து மக்கள், உக்ரைன் நாட்டினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களை என்றைக்கும் மறக்கமுடியாது. பிற நாடுகளும் உக்ரைனுக்கு பல்வேறு மனிதநேய உதவிகளை செய்து வருகிறார்கள். இக்கட்டான சூழலில் உதவும் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 

உக்ரைனில் நீங்கள் பிறந்த இடம் எது?

உக்ரைனில் உள்ள மரியுபோல் என்ற நகரத்தில்தான்  பிறந்தேன். அந்த நகரம் இப்போது ரஷ்ய ராணுவத்தால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. எனது குடும்பத்திலுள்ள பெண்கள் ஜெர்மனியில் உள்ளனர். திருமணச்சட்டப்படி ஆண்கள் மட்டும் உக்ரைனில் உள்ளனர். எனது மாமா ராணுவத்தில் இணைந்து போரிட்டி வருகிறார். நான் உக்ரைனுக்கு சென்று எனது மாமாவிற்காக காத்திருப்பேன். அவர் வெற்றியுடன் திரும்பி வருவார் என நினைக்கிறேன். 

டைம்ஸ் ஆப் இந்தியா

சரண்யா சிஆர்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்