மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

 










 மூட்டுகள் பற்றி அறிவோம்...



மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.   

முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.  

முளை மூட்டு (Pivot Joint)

மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல. 

கீல் மூட்டு (Hinge joint)

மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது. 

தகட்டு மூட்டு (Gliding joint)

தட்டை எலும்புகளுக்கு இடையில் அமைந்த மூட்டு அமைப்பு. இவை, பக்கவாட்டில் நகரும் இயல்புடையன. எடு.மணிக்கட்டு, கணுக்கால், முதுகெலும்பு

அசையாமூட்டு (Immovable joint)

சிலவகை  எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இவை நகராதவை. எடு.மண்டையோடு

பந்து கிண்ண மூட்டு (Ball and socket joint)

தோள்பட்டை, தொடை எலும்பு இந்த வகையிலானவை. இவற்றில் உட்புறத்திலுள்ள மூட்டுகள் பந்து போன்ற வடிவில் இருக்கும்.  இதன் காரணமாக, பல்வேறு இயக்கங்களை செய்ய முடியும். 

சேணமூட்டு (Saddle)

குதிரை சேண அமைப்பிலான  மூட்டு. முன்னே,பின்னே, பக்கவாட்டில் எலும்புகளை அசைக்கலாம்.  உடம்பில் அமைந்துள்ள ஒரே சேணவகை மூட்டு, கட்டைவிரல்  தான். 

முண்டனைய மூட்டு (Ellipsoidal joint)

ஆட்காட்டி விரல் இந்த வகை மூட்டால் அமைந்துள்ளது. இவற்றை வட்டமாக சுற்றமுடியாது. முன், பின், பக்கவாட்டு இயக்கங்களை செய்யலாம். 



நன்றி

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியா மட்டும் இல்லையென்றால் மூட்டுகளின் தமிழ்ப்பெயர்களை எளிதாக எழுதியிருக்க முடியாது. தோராயமான தகவல்கள் என்ற கருத்துகளை தாண்டி, விக்கிப்பீடியா மட்டுமே நாம் தேடும் பொருட்கள் பற்றிய சில தகவல்களையேனும அறியத் தருகிறது. 


https://www.thoughtco.com/types-of-joints-in-the-body-4173736

தினமலர் பட்டம்

கருத்துகள்