நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர்
ஓம் பிர்லா
சபாநாயகராக உங்களது சாதனை என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.
மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே?
என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.
முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா?
நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்திறன் தொடர்ச்சியாக மேம்பட்டு வந்திருக்கிறது. அதை நீங்களே பார்க்கலாம்.
மசோதாக்கள் முறையாக விவாதிக்கப்படாமல் சட்டமாக்கப்படுகின்றன என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளதே?
நானும் இதைப்பற்றி கேள்விப்பட்டேன். முடிந்தவரை மசோதாக்களுக்கான விவாத நேரத்தை அதிகப்படுத்தியுள்ளேன். அவைக்குள் முன்வைக்கப்படும் மசோதாக்களை முடிந்தவரை விவாதம் செய்துதான் சட்டமாக்க அனுமதி பெறுகிறோம். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கூறிய கருத்து சரியானது அல்ல. நாங்கள் கூறுவதற்கு ஆவணங்கள் உள்ளன. ஜனநாயக நாடாக இந்தியா இந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எதிர்கட்சிகள், அரசு மக்களவையில் சரியான விதத்தில் விவாதம் செய்யவில்லை என்று புகார்களை கூறியிருக்கிறது. விவாத முறைகளை மேம்படுத்த ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவை சுமூகமாக செல்ல நானும் நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் ஆளும் கட்சி, எதிர்கட்சி தலைவர்களுடன் விவாதித்து வருகிறேன். தடைகளை விலக்க என்னாலான முயற்சி இதுவே. அவை சுமூகமாக நடக்கவேண்டும். நான் இதை பின்பற்றி வருகிறேன்.
நாடாளுமன்றத்தில் இந்தி பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள். ஆங்கிலம் பேசும் அமைச்சர்களை கூட இந்தி பேச வற்பறுத்துகிறார்களே?
அரசு அங்கீகரித்த 24 மொழிகளில் எதை வேண்டுமானாலும் அமைச்சர்கள் பேசலாம். அவர்கள் பேசும் மொழியை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. ஆங்கிலம், இந்தி என்பது அதிகம் பேசப்படும் மொழியாக உள்ளது. ஒருவர் எந்த மொழியில் பேசவேண்டும் என சபாநாயகராக நான் வற்புறுத்த முடியாது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ரேணுகா பூரி
illustration -IE
கருத்துகள்
கருத்துரையிடுக