அமெரிக்க பெண்ணின் இந்திய தெய்வ முரண்பாடுகளைப் பற்றிய அனுபவத் தொகுப்பு! நூல் புதுசு















 அமெரிக்கன் கேர்ள் இன் இந்தியா

லெட்டர்ஸ் அண்ட் ரீகலெக்ஷன்ஸ் 1963-64

வெண்டி டோனிகர்

ஸ்பீக்கிங் டைகர்

கல்கத்தாவிற்கு முதன்முறையாக டோனிகர் வரும்போது அவரின் வயது 23. அங்குதான் சிவன், விஷ்ணு கோவில்களில் இருந்த முரண்பாட்டைப் பார்த்தார். காமமும், தூய்மையும் கலந்த வடிவம் அவரை ஈர்த்தது. இந்த நூலில் உள்ள கடிதங்கள் அனைத்துமே இதுதொடர்பாக அவர் எழுதியவையாகும். இந்துமதம், அதன் மூடநம்பிக்கைகள் பற்றி முன்னமே வெண்டிகர் நூல்களை எழுதியுள்ளார். 

டு ரைஸ் எ ஃபாலன் பீப்புள் - ஹவ் நைன்டீன்த் சென்சுரி இண்டியன்ஸ் சா தேர் வேர்ல்ட் அண்ட் ஷேப்டு அவர்ஸ் 

ராகுல் சாகர் 

ஜக்கர்நட்

பழைய சிந்தனைகளை, தாக்கங்களை முன்வைக்கும் நூல்தான் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியர்கள் எப்படி யோசித்தார்கள், மதம், வணிகம், உலக நாடுகளுடனான உறவு ஆகியவற்றை பற்றி பல ஆளுமைகள் பேசிய, எழுதிய கருத்துகளை நூல் தொகுத்துள்ளது. 


தி பீப்புள் ஆஃப் தி இண்டஸ் 

பெங்குவின் 

இது ஒரு கிராபிக் நாவல். நிகில் குலாத்தி, ஜொனாதன் மார்க் கெனோயெராஸ்க் நூலில் நிறைய கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிந்து சமவெளி மக்கள் யார், அவர்கள் வாழ்க்கை எப்படி முடிவுக்கு வந்தது என்றெல்லாம் கேள்விகள் தொடங்கி நீள்கின்றன. இவற்றுக்கான பதில்களை அறிய நூலை வாங்கிப் படியுங்கள். 


அன்சங் ஜீனியஸ் 

எ லைஃப் ஆப் ஜகதீஷ் சந்திரா போஸ்

ஆலெப்

இந்திய அறிவியல் உலகமே மறந்துபோன மனிதரின் கதை. இவரைப் பற்றி குணால் கோஷ் தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். ஜகதீஷ் போஸ் 1937ஆம் ஆண்டு காலமானார். 

தி வார்டெக்ஸ் 

ஹார்பர் கோலின்ஸ் 

ஸ்காட் கார்னி - ஜாஸன் மிக்லியன் ஆகியோர் கிரேட் போலா புயல் எப்படி 5 லட்சம் மக்களை பலி வாங்கியது அதன் பின்தொடர்ந்த நிகழ்ச்சிகளை நூல் விவரிக்கிறது. 

Readers digest june 2022



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்