முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

 









பிரதிநிதி
தெலுங்கு 
இயக்கம்
பிரசாந்த் மந்தரா



நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல. 

முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை. 




நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர் சீனு. வெறும் சீனு அல்ல. மஞ்சோடு சீனு. 

அவரின் நோக்கமே முதியோர் இல்லம் ஒன்றை உருவாக்கி அதை முதல்வரை வைத்து திறப்பதுதான். இதை செய்யவே அவர் வேலைக்கு போக நினைக்கிறார். அதாவது நினைக்கிறார் போகவில்லை. இதே கதையை சற்று உல்டா செய்து தான் தனது காதலியை  கவர் செய்கிறார். சமூகம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான். கல்யாணம் வரை வரும்போது சுயநலம்தானே முன்னுக்கு வரும். அப்படி மஞ்சோடு சீனுவின் காதலி கேட்கும்போது அவரால் ஏதும் கூறமுடிவதில்லை. சமூகம்தான் முக்கியம் என நினைக்கிறார். 

இந்த கதையை நாம் கேட்கும் போது நமக்கே தலை சற்று சுற்றுகிறது.  மஞ்சோடு சீனுவின் கதையை அவருக்கு பதில் இவர் என ஆள் மாற்றி நடித்தால் அதுதான் அமைச்சரின் மகன் காதல் கதை.  இப்படி இவர் போலீசில் கதை சொல்ல, நேரம் போகிறது.,

கட்டிடத்திற்குள் மஞ்சோடு சீனு, முதலமைச்சரை மிரட்டி காரியம் சாதிக்க முயன்று கொண்டிருக்கிறார். அவர் தனக்காக ஏதும் கேட்கவில்லை. கள்ளநோட்டாக தன் கைக்கு வந்த ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொடுக்க சொல்லுகிறார். கமிஷனர் பலரும் பீதியாகிறார்கள். ஆயிரம் ரூபாய்க்காக கடத்தலா? என மிரள்கிறார்கள். உண்மையில் சீனுவின் உண்மையான எண்ணம் என்ன, ஏன் அவர் முதல் அமைச்சரை கடத்தினார் என்பதை படம் மெல்ல நிதானமாக சொல்லுகிறது. 

படத்தில் நிறைய குறைகளை சாதாரணமாக பார்த்தாலே தெரியும். முழுக்க அறைக்குள் நடைபெறும் படம் என்பதால், எளிதாக சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நர ரோகித் முதல்வரை கடத்துவது எதற்கு என்ற காரணம் தெரியும்போது சப்பென படம் மாறுகிறது. படத்தில் காதல் பாடல்கள் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் சற்று மூச்சுவிடுவதற்கும், படத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் உதவுகிறது. 

நர ரோகித்தின் நடிப்பும், ஸ்ரீவிஷ்ணுவின் அப்பாவி முகத்தோற்றமும், தன்னை அவர் எப்படி பிறரிடம் காப்பாற்றிக் கொள்கிறாரென்பதும் சுவாரசியமாக இருக்கிறது. மற்றபடி பார்வையாளர்கள், படத்தை திரையரங்களில் பார்க்க நேரிட்டால் வருத்தப்படுவார்கள். அரசியல்வாதி கட்சிக்காக அல்ல மக்களுக்காகவே இயங்க  வேண்டும் என்பதை வசனமாக சொல்லிவிட்டார்கள். காட்சி ரீதியாக நாம் பார்ப்பது பெரும்பாலும் ஊடகங்களின் நியூஷ் பிளாஷைத்தான். அவை பெரிய ஊக்கம் தரும் காட்சிகளாக அமையவில்லை. 


மக்கள் பிரதிநிதி


கோமாளிமேடை டீம் 






















கருத்துகள்