புத்தகம் புதுசு - சாபம் கொண்ட வைரத்தின் கதை

 










தி கிங் ஹூ டர்ன்டு இன்டு எ செர்பன்ட் அண்ட் அதர் திரில்லிங் டேல்ஸ்  ஆஃப் ராயல்டி ஃபிரம் இண்டியன் மித்தாலஜி

சுதா மாதவன்

ஹாசெட்

399

நூலில் மொத்தம் 15 ஆர்வமூட்டும் கதைகள் உள்ளன. நூலில் உள்ள ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரலாற்றில் உள்ள மன்னர்கள் இடம்பெற்றுள்ளனர். 

லேடிஸ் டெய்லர்

பிரியா ஹஜேலா

ஹார்ப்பர் கோலின்ஸ் 

399

பெண்களுக்கான உடைகளை உருவாக்கி தைப்பவர் குருதேவ். பிரிவினைக்கு பிறகான காலத்தில் நடைபெறும் கதை. அப்போது, குருதேவ் பாகிஸ்தானின் கிழக்குப்புறம் பிழைக்க செல்கிறார். அங்கு சென்று தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதே இந்த நாவலின் கதை. 

தி டெத் ஆஃப் கீர்த்தி கடக்கியா

மீட்டி ஷெராப் ஷா

ப்ளூம்ஸ்பரி இந்தியா

499

இது ஒரு மர்ம நாவல். ரதி ஜாவேரியின் தோழி சஞ்சனா. இவள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறாள். சஞ்சனா அப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிற நேரமும் அதுதான். சஞ்சனாவை பயமுறுத்தும் விஷயங்களை நடைபெற, அவளுக்கு உதவியாக ரதி வந்து மர்மங்களை கண்டறிகிறாள். இதுதான் கதை. 

ஆஸ்மா ஐ நூர் - தி கர்ஸ்டு ஜூவல்

சுதிப்தா சென் குப்தா

ரூபா

395

ஆஸ்மா ஐ நூர் என்பது பிரிட்டிஷ் கால இந்தியாவில் பலராலும் தேடப்பட்ட கொள்ளையிடப்பட்ட வைரம். பிளாசிப்போர் முடிந்தபிறகு கதை தொடங்குகிறது. ராபர்ட் கிளைவ், மீர் ஜாபர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களாக கதையை நடத்துகிறார்கள். 


the hindu



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்