துரத்தும் துரோக சதிவலையில் மாட்டிக்கொள்ளும் இளவரசன் பால்! - டுயூன் 2021

 











டுயூன்

ஆங்கிலம்


ஆங்கிலத் திரைப்படம். ஹாலிவுட்டில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படம். இதனை நவீன தொழில்நுட்பத்தில் வினோதமான பல்வேறு பொருட்களை வைத்து பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். 




என்ன கதை?

இதுவேறுவகையான உலகம். இப்போது உலகம் என்பது விண்வெளியில் தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு உலகங்களை கட்டுப்படுத்துவது பேரரசர். அவருக்கு கீழே உள்ள கப்பம் கட்டும் சிற்றரசர்கள் பலர் உண்டு. அதில் புகழ்பெற்றது, அட்ரெய்டஸ். இதற்கு எதிரி பாரோன். 

பாரோன், பல்வேறு ஆண்டுகளாக அதாவது எண்பது ஆண்டுகளாக அராக்கிஸ் எனும் பாலைவனத்தை கைக்குள் வைத்து ஆள்கிறார்கள். அங்குள்ள ஸ்பைஸ் எனும் கனிம வளமே முக்கியமான காரணம். ஆனால் திடீரென பேரரசர், அந்த பாலைவனம் இனி அட்ரெய்டஸிற்கு சொந்தம். பாரோன் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கூறிவிடுகிறார். இதனால் அங்கு அட்ரெய்டஸ் அரச குடும்பமும், ராணுவமும் செல்கிறது. ஆனால் அது அட்ரெய்டஸ் குடும்பத்தை அழிக்க பேரரசர் விரிக்கும் வலை. சதித்திட்டம் என்பதை அட்ரெய்டஸ் அரசர் டியூக் அறிவதில்லை. அறிந்தாலும் சொல்லாமல் இருக்கிறார் என கொள்ளலாம். 




அவருக்கு ஒரே நம்பிக்கை அவரது மகன் பால் அட்ரெய்டஸ் தான். வம்சத்தை ராணுவத்தை அவன்தான் காக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் சதி வலையில் அட்ரெய்டிஸ் ராணுவமும் அரச குடும்பமும் சிக்கிக் கொள்கிறது. பாரோனின்ராணுவத்துடன் பேரரசின் சர்துகர் படையும் சேர்ந்து அட்ரெய்டிஸை அராக்கிஸ் பாலைவனத்தில் தாக்கி வீழ்த்துகிறது. இதில் இருந்து தப்பிக்கும் பால், அவனது அம்மா இருவரும் எப்படி உயிர்பிழைக்கிறார்கள் என்பதே கதை. இதில் இன்னொரு பாகம் தயாரிப்பில் இருக்கிறது. முதல் பாகம் என்பதால், பாத்திரங்களும், நிலப்பரப்ப சார்ந்த அறிமுகம் என இப்படத்தைக் கூறலாம். 

படத்தில் வரும் மணல் புழு, ஹெலிகாப்டர், கனிமத்தை அள்ளும் மெஷின், ஆயுதங்கள், குறிப்பிட்ட குரல் தொனியில் மனோவசியம் செய்வது, ஃபிரெமன் மக்களின் விடுதலை மனோபாவம், நேர்மை என படத்தை ரசிக்க வைக்க நிறைய விஷயங்கள் உள்ளன. படத்தில் ஹான்ஸ் ஜிம்மரின் இசை மற்றொரு பாத்திரம் போல நிழல்போல கேமரா நகரும் இடம்தோறும் கூடவே உடனே வருகிறது. அரச குடும்பத்தை வீழ்த்துபவன் வைத்தியன், அதுவும் மாண்டரின் மொழி பேசும் சீனன். சிறப்பு!

இளவரசராக நடித்திருக்கும் டிமோத்தி சாலமட், கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அல்லாடும் பாத்திரம். எதிர்காலம் புதிர்களாக கனவில் தோன்றிக்கொண்டே இருக்க நிஜமோ பயங்கரமாக இருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு ஒற்றைக்கு ஒற்றை ஃபிரெமன் வீரரோடு போரிட்டு வெல்லும் காட்சி சிறப்பாக உள்ளது. உண்மையில் அவர் அந்த ஃபிரமென் வீரரை கொல்ல நினைக்காத போதும் அம்மக்களின் விதிக்காக கொன்றுவிட்டு வருந்துவார். அந்த ஃபிரமென் கூட்டத்தில் இணைந்துகொள்வார். இதுதான் படத்தின் இறுதிக்காட்சி.


தினகரனின் கேப்ஷன் போல புதிய அனுபவம்

கோமாளிமேடை டீம் 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்