தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

 









காந்தி






நமது மொழிப்பிரச்னை
காந்தி
தமிழில் 
அ.லெ. நடராஜன்





இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும். 

பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார். 

இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார். 

நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்கிறது. பயன்பாட்டில் எளிதானது எது, வெகுஜன மொழியாக இருப்பது எது என பல்வேறு கேள்விகளுக்கு எடுத்துக்காட்டுகள் வழியே இந்திதான் அனைத்து மாநில மக்களுக்கும் ஏற்ற பொது மொழி என்று கூறுகிறார். 

மக்களுக்கான பொது சேவை செய்பவர்களும், பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக தேவநாகரி லிபி கொண்ட இந்தியை கற்க வேண்டுமென கூறுகிறார் காந்தி. ஆனால் நிறைய இடங்களில இந்தி என்பதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டு கற்க வேண்டும் என்ற தொனியே அதிகம் உள்ளது. மொழி அமைப்புகள் சார்ந்த கூட்டத்தில் பேசும் உரையும், அதற்கென தயாரித்த எழுத்தும் இருப்பதால் மொழியைப் பற்றிய காந்தியின் அவதானிப்பு என்னவென்று அறிவதில் சுணக்கமாக உள்ளது. 

காந்தி மொழிகளைப் பற்றி எழுதிய காலகட்டத்தில் இந்து, முஸ்லீம் வேற்றுமை பிரிவினை இருந்தது. எனவே, அவர்களை புரிந்துகொள்ள வைக்க ஒரே மொழி தேவை என்ற முடிவுக்கு வந்தார். அது சாத்தியமானதா இல்லையா என்பதல்ல விஷயம். அவர் ஒரே மொழிதான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என நம்பினார். அதை வலியுறுத்தி பல்வேறு கருத்துகளை நூலில் கூறுகிறார். தான் கூறும் கருத்தே முக்கியம் என்று காந்தி நினைக்கவில்லை. பிறர் அனுப்பும் கடிதங்களையும் அவர் படித்தார். அதில் கூறும் கருத்துகளை, களத்திலுள்ள நிஜத்தை புரிந்துகொள்ள முயல்கிறார். 

பல்வேறு செய்தியாளர்கள், நிருபர்கள் எழுதும் மொழிசார்ந்த கடிதங்களை வெளியிட்டு பதில் அளித்தார். இதுதான் காந்தியை ஜனநாயகப்பூர்வமான தன்மையைக் காட்டுகிறது. 

ஒரே நாடு ஒரே மொழி என முன்னேறி வரும் பாஜகவுக்கு இந்த நூல் அவர்களது கருத்தை பலப்படுத்த எதிர்காலத்தில் உதவும். அவர்களது கட்சியில் பலரும் உடற்பயிற்சிக்கென அதிக நேரத்தை செலவழிப்பதால், மூளைப்பயிற்சி அறிவுக்கான தேடல் குறைந்துவிட்டது. இல்லையெனில் இந்நேரம் இந்த நூலை தோண்டியெடுத்து காந்தியே சொல்லிவிட்டார் என சொல்லி இருப்பார்கள். 

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்