சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!
இகோர் குர்சாடோவ் |
முதல் அணுஉலை
இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.
இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. 5 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உலையில் பயன்படுத்தப்பட்டது.
இந்த அணு உலையின் பெயர், ஓப்னின்ஸ்க். ரியாக்டருக்கு ஏஎம் -1 என பெயர் சூட்டப்பட்டது. இந்த அணு உலையை வடிவமைத்தவர் இகோர் குர்ச்சாடோவ். ரஷ்யாவின் அணு ஆயுதங்களை வடிவமைப்பதிலும் பின்னணியில் இருந்தவர் இவரே. 48 ஆண்டுகள் பாதுகாப்பு பிரச்னைகள் இன்றி செயல்பட்ட அணு உலை இது. இதனையே பிற்கால அணு உலை கட்டுமான பொறியாளர்கள் பின்பற்றினர்.
டெல் மீ வொய் 2002
கருத்துகள்
கருத்துரையிடுக