தொழிலை அறிய அதை தொடங்கிவிடுங்கள் - கனிகா குப்தா ஷோரி, ஸ்கொயர் யார்ட்ஸ்

 








கனிகா குப்தா ஷோரி 

நிறுவனர், செயல்பாட்டு இயக்குநர் ஸ்கொயர் யார்ட்ஸ் 







வார்ட்டன் வணிகப்பள்ளியில் படித்தவர் கனிகா. தற்போது ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 

தனது தொழில் சாதனைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கனிகா. இளம் சாதனையாளர், வுமன் ஐகான், நாற்பது வயதுக்குள் உள்ள நாற்பது தொழிலதிபர்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்று சாதித்திருக்கிறார். அவரிடம் பேசினோம். 

வணிகத்திற்குள் எப்படி உள்ளே வந்தீர்கள். உங்களால் ரியல் எஸ்டேட் வணிகத்தில் சாதிக்கமுடியும் என்று தோன்றியதா?

குழந்தை பிறப்புக்குப் பிறகு நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தோம். இத்துறையில் எந்த பாகுபாடுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் நிறுவனங்களும் ஆட்களும் குறைவு. 

இதற்காகவே நாங்கள் 2014இல் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழிலை தொடங்கும் முன்னரே வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்தேன். தைரியம் வந்ததும் தொழிலைத் தொடங்கினேன். இவைதான் எனக்கு இப்போதும் தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவுகிறது. 

உங்களின் ரோல்மாடல் யார்?

பெப்சி குழும தலைவராக இருந்த இந்திரா நூயி என்னுடைய ரோல்மாடல். அவர் தனது வேலையையும் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக சமாளித்ததை நான் அறிந்துள்ளேன். நம்பிக்கை, நேர்மறையாக எதையும் சாத்தியப்படுத்தும் வேகத்தை வழங்குகிறார். இதை அடிப்படையாக கொண்டே நான் திட்டங்களை செயல்படுத்துகிறேன். 

தொழில்வாழ்க்கையில் கற்ற முக்கியமான பாடம் என்ன?

ஐடியா என்பது பேச்சளவில் ஒன்றுமே இல்லை. அதனை செயல்படுத்தினால்தான் அதனை முழுக்க அறிய முடியும். உங்களை நெகிழ்வாக வைத்துக்கொண்டால் மட்டுமே உங்களை நிறைய விஷயங்களை செய்யுமாறு தக்க வைத்துக்கொள்ள முடியும். ஒரு நேரத்தில் ஒரு திட்டம் என திட்டமிட்டு வேலை செய்வது முக்கியம். இந்த நேரத்தில் விரக்தியான விஷயங்கள் நடைபெறலாம். நேர்த்தி என்பதை சாத்தியமாக்க காலம் தேவை. சரியானவை கிடைத்துவிட்டால் போதுமானது. அதனை ஏற்றுக்கொள்ளலாம். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

நீங்கள் நீச்சலை பழக வேண்டுமென்றால், உடனே நீரில் குதிக்கவேண்டும். இதை தற்காப்புக்கலை வீர ரும் நடிகருமான ப்ரூஸ் லீ சொன்னார். உங்கள் உள்ளுணர்வு சொல்லுவதை முழுமையாக காது கொடுத்து கேளுங்கள். 

தொழில்முனைவோராக வேறு ஒருவரின் கோணங்களையும் ஆராய்ந்து பார்க்கத் தெரிய வேண்டும். சந்தைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள தெரிய வேண்டும். தொழிலை நடத்தும் வேகத்தில் நீங்கள் மாறிவிடக்கூடாது.உ ங்களின் தனித்துவத்தை எப்போதும் இழக்காமல் இருப்பது முக்கியம். 


ஃபெமினா 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்