இடுகைகள்

நீர்நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியுமா?

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

நிலத்தில் கூடு அமைத்து இனப்பெருக்கும் செய்யும் சின்ன சீழ்க்கை சிறகி!

படம்
  சின்ன சீழ்க்கை சிறகி சின்ன சீழ்க்கை சிறகி பெயர்: சின்ன சீழ்க்கை சிறகி (lesser whistiling duck ) குடும்பம்:  அனாடிடே (Anatidae) இனம்:  டி. ஜவானிகா (D. javanica)   அறிவியல் பெயர்: டெண்ட்ரோசைக்னா ஜவானிகா (Dendrocygna javanica) சிறப்பம்சங்கள்  சாக்லெட் நிறம், பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பறவைகள் அமைப்பில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சிறு தவளை, மீன், புழுக்கள், நீர்தாவரங்கள், தானியங்களை உட்கொள்கிறது. நிலத்தில் கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கிறது.  எங்கு பார்க்கலாம் இந்திய துணைக்கண்டம், தெற்காசியாவில் அதிகம் காணப்படுகின்றன. அறுவடை செய்த சதுப்புநிலம், ஈரமுள்ள வயல்கள், ஏரிகளில் பார்க்கலாம்.  ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை  (Least concern LC) 3.1 ஆயுள் 9 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை 7 முதல் 12 வரை எழுப்பும் ஒலி சீசிக்...சீசிக் ( “seasick-seasick.") ஆதாரம் https://www.thainationalparks.com/species/lesser-whistling-duck https://www.beautyofbirds.com/lesserwhistlingducks.html