நிலத்தில் கூடு அமைத்து இனப்பெருக்கும் செய்யும் சின்ன சீழ்க்கை சிறகி!

 






சின்ன சீழ்க்கை சிறகி












சின்ன சீழ்க்கை சிறகி

பெயர்: சின்ன சீழ்க்கை சிறகி (lesser whistiling duck )

குடும்பம்:  அனாடிடே (Anatidae)

இனம்:  டி. ஜவானிகா (D. javanica) 

 அறிவியல் பெயர்: டெண்ட்ரோசைக்னா ஜவானிகா (Dendrocygna javanica)

சிறப்பம்சங்கள் 

சாக்லெட் நிறம், பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பறவைகள் அமைப்பில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சிறு தவளை, மீன், புழுக்கள், நீர்தாவரங்கள், தானியங்களை உட்கொள்கிறது. நிலத்தில் கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கிறது. 

எங்கு பார்க்கலாம்

இந்திய துணைக்கண்டம், தெற்காசியாவில் அதிகம் காணப்படுகின்றன. அறுவடை செய்த சதுப்புநிலம், ஈரமுள்ள வயல்கள், ஏரிகளில் பார்க்கலாம். 

ஐயுசிஎன் பட்டியல்

அழியும் நிலையில் இல்லாதவை  (Least concern LC) 3.1

ஆயுள்

9 ஆண்டுகள்

முட்டைகளின் எண்ணிக்கை

7 முதல் 12 வரை

எழுப்பும் ஒலி

சீசிக்...சீசிக் ( “seasick-seasick.")

ஆதாரம்

https://www.thainationalparks.com/species/lesser-whistling-duck

https://www.beautyofbirds.com/lesserwhistlingducks.html


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்