கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

 












கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம். 

ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.  

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிக்கலான புதிர்களை தீர்க்கவேண்டும். அப்போதுதான் புதிய கிரிப்டோகரன்சிகள் பரிசாக கிடைக்கும். இதை மைனிங் என்கிறார்கள். இச்செயல்பாட்டை செய்ய அதிக சக்தி வாய்ந்த கணினிகள் தேவைப்படுகின்றன. 

இந்த செயல்பாட்டிற்கு பின்னணியில் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பம் உள்ளது. 

பிளாக்செயின்

சடோஷி நகாமோடோ என்பவர்தான் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார். இவர் தனிமனிதரா, குழுவா என்று தெரியவில்லை. இந்த தொழில்நுட்பம் 2008ஆம் ஆண்டு அறிமுகமானது. பரிவர்த்தனையாகும் பணம் டிஜிட்டல் முறையில் பதிவாகும். இதனை யாரும் பார்க்க முடியும். தொகையை கண்டறிவது கடினம். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்பட்டு கோடிங்குகள் பதிவானால் பிளாக்செயின் பெரிதாகிக்கொண்டே செல்லும். 

ஸ்டேபில் காயின்ஸ்

இந்த கரன்சி, உலகில் உள்ள ரூபாய் அல்லது டாலர் போன்ற ஒரு நாட்டின் கரன்சியோடு தொடர்புகொண்டிருக்கும். இதனால் இதன் மதிப்பு அந்த கரன்சியின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மாறும் . அதிக சரிவைக் கொண்டிருக்காது. டெதர், டையம் ஆகியவை ஸ்டேபில் காயின் என்று கூறலாம். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 


கருத்துகள்