தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

 






pixabay





கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்! 

உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார்.

அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார். 

கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன்சா கிராம நூலகம் ஆகும்.   இந்த நூலகம், தினசரி நண்பகல் 2.30 தொடங்கி மாலை 6 மணி வரை இந்த நூலகம் செயல்பட்டு வந்தது. இங்கு பாடநூல்களோடு இலக்கிய நூல்களும் வாசிக்க வைக்கப்பட்டிருந்தன. பன்சா நூலகத்திற்கு செல்ல கல்யாண்பூர் கிராம மாணவர்கள், 17 கி.மீ. பயணம் செய்யவேண்டும்.

இந்த நூலகத்தின் செயல்பாடுகளை கல்யாண்பூரிலும் தொடர அருண்குமார் நினைக்கிறார். இதற்கான உதவிகளை செய்து நூலகத்தை நடத்தி வருகிறார் சுனில். இவர் ஆசிரியராவதற்கான முயற்சியில் உள்ளார்.  “சாதி வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்கள் படிக்கும் இடம்தான் நூலகம். இங்கிருந்து மாணவர்கள் எடுத்துச்செல்லும் நூல்களை திரும்ப கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என கூறப்போவதில்லை. இந்த நூலகம் நம் அனைவருக்குமானது” என பெருந்தன்மையோடு பேசினார் நூலக பொறுப்பாளரான சுனில். 

தகவல்

theweek

https://www.theweek.in/theweek/current/2021/12/16/a-nottingham-professor-built-a-library-in-his-village-to-make-all-kinds-of-books-accessible.html



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்