ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்
நஸ்ரூதின் ஷா
இந்தி திரைப்பட நடிகர்
தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.
நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம் அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்?
நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.
ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது முக்கியமான நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீராம் லகூ, நிலு புலே, உட்பால் தத் ஆகியோர் சிறிய பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். நான் இதுபோன்ற நடிக்கவெல்லாம் விரும்பவில்லை. எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால், முதல் படத்தில் நான் நாயகனாக நடித்தேன்.
நிஷாந்த் என்ற படத்தை நான் முக்கியமாக எதிர்பார்த்தேன். அந்த படம் சரியாக ஓட வில்லையென்றால் எனது கதை தொடங்காமலேயே முடிந்து போயிருக்கும். அந்த படத்தில் என்னை நடிக்க வைக்கவேண்டாம் என ஷியாமுக்கு நிறைய அறிவுரைகள் கிடைத்தன.
எனவே, எனது நடிப்பு மூலம் பிறர் கூறிய விஷயங்களை நிரூபிக்க விரும்பவில்லை. எனவே நான் கவனமாக இருந்தேன். பொதுவாக தங்களை தயாரித்துக்கொள்ளாத நடிகர்களுக்கு பதற்றம் இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னைப் பொறுத்தவரை பாட்டு, நடனம் எனும்போது மட்டும்தான் பதற்றமாக இருக்கும். மற்றபடி அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து விட்டேன்.
உங்களை எப்படி கலக கார நடிகராக கூறுகிறார்கள்?
என்னுடைய நினைவுகளை ராம் குப்தா, எழுதக்கூறினார். அப்படி எழுதும்போது வந்த விஷயங்களை பலரும் படித்து என்னை இப்படி புரிந்துகொண்டார்கள் என நினைக்கிறேன். எனக்குள் எப்போதும் அதிகாரத்தை எதிர்க்கும் மனப்பாங்கு உள்ளே இருந்து வந்திருக்கிறது. அதனை நான் விரும்பியிருக்கிறேன் என்பதே உண்மை. எனது அப்பா, பள்ளி ஆசிரியர்கள் என எல்லோரிடமே நான் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறேன்.
எங்கள் பள்ளியில் கிறிஸ்துவ சகோதரர்கள் இருந்தனர். இவர்கள் அங்கு படிக்கும் சாதாரண மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடிப்பார்கள், உதைப்பார்கள். நான் இவர்கள் அடித்தால் சரியானபடி திருப்பிக்கொடுப்பேன். இப்படி உருவான குணமே இன்று எனக்கு கிடைத்திருக்க கூடிய கலக பெயருக்கு காரணம்.
நடிப்பிற்கு தயாராவது பற்றி பேசியிருந்தீர்கள். இப்போது நடிப்பில் நஸ்ரூதின் ஷா தொலைந்து போகிறார் என புரிந்துகொள்ளலாமா?
நான் இத்தனை ஆண்டுகளாக நடிப்பை கற்று வந்திருக்கிறேன். குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் மறைய வேண்டும் என்பது அவரது பணி அல்ல. ஓவியம், நடனம் ஆகியவற்றையும் இந்த முறையில்தான் பார்க்க வேண்டும். நடிகர் நடிப்பில் தெரிவதால் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஒரு நடிகர் ஒரே மாதிரி நடிக்க கூடாது. அதனை எழுத்திலும் சரி, நடிப்பிலும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். மற்றபடி ஒரு நடிகர் எத்தனை முறை உடல், மனம், உணர்ச்சி என தன்னை மாற்றிக்கொண்டு நடிக்க முடியும்? இதனால் தான் டேனியல் லூயிஸ் என்ற நடிகர் நடிப்பை குறைத்துக்கொண்டுவிட்டார்.
நடிகரின் மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டிருக்கும்போது அவர் நடிகராக தோன்றுகிறாரா, நட்சத்திரமாக தோன்றுகிறாரா என்று பிரச்னைகள் உருவாகும் என்று நினைக்கிறேன். நான் இந்தப் படத்தில் உங்களைப் பார்க்கவில்லை. பாத்திரத்தைத் தான் பார்த்தேன் என நிறையப் பேர் சொல்லுகிறார்கள். இதனை சிறப்பான எழுத்திற்கு கிடைத்த பாராட்டாகவே எடுத்துக்கொள்ளலாம். அந்தளவு எழுத்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்களது அடுத்த சீரிஸ் கௌன் பனேகா சிகார்வதி வரப்போகிறது. இது நகைச்சுவையை மையமாக கொண்டது. இன்று நகைச்சுவையை சிறப்பாக எழுதுகிறார்கள் என நினைக்கிறீர்களா?
இல்லை. தனது தினசரி வாழ்க்கையிலிருந்து பலரும் நகைச்சுவையை உருவாக்கலாம். ஆனால் எதற்கு மேற்கு நாடுகளிலிருந்து நகைச்சுவையை நகல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாம் இன்னும் இந்தியாவின் தன்மை கொண்ட நகைச்சுவையை உருவாக்கவில்லை. இன்றும், நாம் ஒருவரின் உடல் ஊனத்தையும், தோற்றத்தையும் வைத்து நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறோம். பார்சி, சர்தார்களை குறிவைத்து நிறைய நகைச்சுவைகள் உண்டு. முஸ்லீம் எப்போதுமே பிறருக்காக தன்னை தியாகம் செய்வது போல காட்சிகள் வருகின்றன.
கிறிஸ்தவர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார்கள் என்று கடந்த காலங்களில் படம் எடுத்தனர். ஜானி வாக்கர், கேஷ்டோ முகர்ஜி ஆகியோரை மக்களுக்கு பிடித்தது. இவர்களன்றி பால்ராஜ் சஹ்னி, திலீப் குமார் ஆகியோர் இங்கு நடித்தனர். வங்காளத்தில் பகாரி சன்யால் இருந்தார். தமிழிலும் மலையாளத்திலும் சிறந்த நடிகர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோரும் இல்லையென்றால், சபனா ஆஸ்மி, ஓம் பூரி, நஸ்ரூதின் ஷா என நாங்கள் நகைச்சுவையை நம்பி எதுவும் செய்திருக்க முடியாது. அடுத்து வந்த இர்பான் கான் எங்களை விட சிறப்பாக நடித்தார். அடுத்து வரும் தலைமுறையினர், சினிமா பற்றிய கல்வியைக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களுக்கு இதில் என்ன செய்ய முடியும் என்பது தெரியும்.
அதற்கான திறனோடு நடிப்பவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நகைச்சுவை எழுத்தாளர்கள் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை.
ரீடர்ஸ் டைஜெஸ்ட்
ஸ்ரீவஸ்தா நெவாடியா
கருத்துகள்
கருத்துரையிடுக